spot_img
HomeNewsRX 100' இயக்குநர் அஜய் பூபதி 'காந்தாரா' புகழ் அஜ்னீஷ் லோக்நாத்துடன் இணைகிறார்

RX 100′ இயக்குநர் அஜய் பூபதி ‘காந்தாரா’ புகழ் அஜ்னீஷ் லோக்நாத்துடன் இணைகிறார்

RX 100′ இயக்குநர் அஜய் பூபதி ‘காந்தாரா’ புகழ் அஜ்னீஷ் லோக்நாத்துடன் இணைகிறார்

கடந்த 2018-ல் வெளியான ‘RX 100’ படம் அதனுடைய ட்விஸ்ட் மற்றும் எதிர்பாராத கதைக்களத்திற்காக வெற்றிப் பெற்ற ஒன்று. இதற்குப் பிறகு வித்தியாசமான கதைக்களங்களோடு அஜய் பூபதி களம் இறங்கினார். அந்த வகையில், தற்போது அவரது மூன்றாவது படம் சமீபத்தில் லான்ச் செய்யப்பட்ட ‘A Creative Works’ பேனரின் கீழ் தயாரிக்கப்பட இருக்கிறது. இந்த புராஜெக்ட்டிற்க்காக முத்ரா மீடியா வொர்க்ஸூடன் அஜய் பூபதி இணைந்துள்ளார்.

இந்தப் படம் குறித்தான அறிவிப்பு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் பலருக்கும் பிடித்த ட்ரெண்டிங் மற்றும் கோல்ட்- ஸ்டாண்டர்ட் இசையமைப்பாளரான B அஜ்னீஷ் லோக்நாத்துடன் இணைந்துள்ளார். ‘காந்தாரா’ மற்றும் ‘விக்ராந்த் ரோணா’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் புகழ்பெற்றவர் அஜ்னீஷ் என்பதால் அவருக்குத் தனியே அறிமுகம் தேவையில்லை. இந்தப் படங்களில் இடம்பெற்ற ‘வராஹ ரூபம்’ பாடலும் ‘ரா ரா ரக்கம்மா’ பாடலும் மிகப்பெரிய வெற்றிப் பெற்று இணையத்தில் ட்ரெண்ட் செட் செய்தது.

அஜய் பூபதியுடன் இணைந்துள்ள அஜ்னீஷ் இந்தப் படத்திலும் மிகச்சிறந்த இசையைக் கொடுக்க உள்ளார். இது நிச்சயம் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லக் கூடியதாக அமையும்.

A Creative Works மற்றும் முத்ரா மீடியா வொர்க்ஸ் இந்தப் படத்தை மிக அதிக பொருட்ச் செலவில் எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாக்க இருக்கிறார்கள்.

Must Read

spot_img