spot_img
HomeCinema Reviewஅயலி விமர்சனம்

அயலி விமர்சனம்

பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறையை கேட்டிருப்போம் இது பெண்களுக்கு இழைக்கப்படும் படிப்பியில் வன்கொடுமையையும் மூடநம்பிக்கையும் பழமையில் ஊறிப்போன பழமைவாதிகளை தோலுரித்துக் பெண்ணினம் உயர கல்வி என்பது கண்டிப்பானது என்பதை உரக்கச் சொல்லி வந்திருக்கும் வெப் சீரியஸ் அயலி

  வயதுக்கு வந்த பெண்கள் பள்ளிக்குச் செல்லக்கூடாது அவர்களை உடனே திருமணத்திற்கு தயார்படுத்த வேண்டும் என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த ஊரில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எந்த ஒரு பெண்ணும் கிடையாது அப்படிப்பட்ட ஊரில் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்ட தமிழ்ச்செல்வி தன் வயதுக்கு வந்ததை மறைத்து பத்தாம் வகுப்பு படித்து மாவட்டத்தில் முதலாவதாக வந்து பெருமை சேர்க்கிறார் இந்த உண்மை தெரிந்த பின் அந்த ஊரில் நடக்கும் சம்பவங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் தமிழ்ச்செல்வி எப்படி எதிர்கொண்டால் என்பதை சொல்ல வருகிறது அயலி

 இயக்குநர் முத்துக்குமார் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர் கதை களத்தையும் திரைக்கதை வடிவத்தையும் அழகாக செதுக்கியிருக்கிறார் 21ம் நூற்றாண்டில் நாம் காலடி எடுத்து வைத்தாலும் கதை 90களில் நடப்பது போல் காட்டி இருக்கிறார் ஆனாலும் இந்த காலகட்டத்திலும் இன்னும் சில கிராமத்திலும் இது போன்ற விஷயங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன

 கல்விதான் ஒரு மனிதனின் மூடநம்பிக்கையை போக்கும் கல்வியினால் எதையும் சாதிக்கலாம் என வீரமங்கையாக தமிழ்ச்செல்விபாத்திரம் ஏற்றிருக்கிறார் கதையின் நாயகியாக அபி.

ஒன்பதாம் வகுப்பு மாணவியாக  அபி.  டாக்டராகும் கனவிற்காக பூப்படைந்த விஷயத்தை வீட்டிலும் மறைத்து ஊரிலும் மறைத்து அவள் நடத்தும் ராஜாங்கம் தான் நம்மை ரசிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது  அசத்தியுள்ளார்.

அவரது அம்மா கேரக்டரில் நடித்துள்ள அனுமோல் மிகச்சிறந்த நடிகை என்பதை வாழ்வியல் எதார்த்தத்தை தன் கண்களாலும் தன் இயலாமையை வெளிக்கொண்டு வரும் காட்சிகளில் நம்மைக் ஆட்கொள்கிறாள் 

தந்தை கேரக்டரில் வரும் அருவி மதன் பாசத்தையும் மறுபக்கம் ஊரின் கட்டுப்பாட்டை மதிக்கும் மனிதனாக இயல்பாக நடிப்பை கொடுத்துள்ளார்.

சிங்கம்புலி கேரக்டர் வில்லன் பாதி காமெடி பாதி என கலந்து தன் பாணியில் நடித்திருக்கிறார

   லிங்கா முதல் சின்னச் சின்ன கேரக்டர்களில் வாழ்ந்திருக்கிறார்கள்

ரேவாவின் இசையில் மண்வாசனை மணக்கிறது. ஒரு சிறிய கிராமம் அதற்குள் சில வீடுகள் மணல் பரப்புகள் காடுகள் அதை ஓவியம் ஆக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர்.கணேஷ்

>சில தேவையில்லாத காட்சிகளை விட்டாள்Zee5 இன் மகுடத்தில் ஒரு கோஹினூர் வைரம்<   தயாரிப்பு குஷ்மாவதி.   அயலி இந்திய கிராமத்து பெண்களின் கூக்குரல்  FOCUSONECINEMA. COMA A K HUSSAIN 8939689281

Must Read

spot_img