நடிகர் கார்த்திகேயாவின் ‘பெதுருலங்கா 2012’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது
ஹீரோ கார்த்திகேயாவின் நகைச்சுவை நிறைந்த எண்டர்டெயினர் படமாக உருவாகி இருக்கும் ‘பெதுருலங்கா 2012’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது. இந்த கிரேஸி என்டர்டெய்னர் திரைப்படம் மார்ச் மாதம் திரைக்கு வர உள்ளது. மிக விரைவில் படத்தின் டீசர் வெளியாக உள்ளது.
இந்த நியூ ஏஜ் ட்ராமா கதையில் கார்த்திகேயா சிறப்பான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். அதேபோல, ‘டிஜே தில்லு’ புகழ் நேஹா ஷெட்டியும் இப்படத்தில் அழகான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த அழுத்தமான திரைக்கதையை உருவாக்க யுகந்தம் கான்செப்ட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் கிளாக்ஸ் இயக்கியுள்ள இப்படத்தை ரவீந்திர பெனர்ஜி முப்பனேனி தயாரித்துள்ளார். லௌக்யா எண்டர்டெயின்மெண்ட்ஸ் இந்தப் படத்தை ஆதரிக்க, சி யுவராஜ் இதை வழங்குகிறார்.
அஜய் கோஷ், ராஜ் குமார் பாசிரெட்டி, கோபராஜு ரமணா, ‘ஆட்டோ’ ராம் பிரசாத், எல்.பி.ஸ்ரீராம், சுரபி பிரபாவதி, கிட்டய்யா, அனிதாநாத், திவ்யா நர்னி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
தொழில்நுட்பக் குழு விவரம்:
சண்டைப் பயிற்சி: அஞ்சி, பிருத்வி ராஜ்,
ஆடை வடிவமைப்பாளர்: அனுஷா புஞ்சலா,
படத்தொகுப்பு: விப்லவ் நியாசதம்,
பாடல் வரிகள்: சிறிவெண்ணிலா சீதாராமசாஸ்திரி, கிட்டு விஸ்ஸபிரகதா, கிருஷ்ண சைதன்யா,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: சுதீர் மச்சார்லா,
இணை தயாரிப்பாளர்கள்: அவனீந்திர உபத்ரஸ்தா & விகாஸ் குன்னாலா, நிர்வாக தயாரிப்பாளர்: துர்காராவ் குண்டா,
ஒளிப்பதிவு: சாய் பிரகாஷ் உம்மடிசிங்கு, சன்னி குரபதி,
இசை: மணி சர்மா,
நடனம்: பிருந்தா மாஸ்டர், மொயின் மாஸ்டர்,
தயாரிப்பாளர்: ரவீந்திர பெனர்ஜி முப்பனேனி,
எழுத்து & இயக்கம்: கிளாக்ஸ்.