சமுத்திரகனி நடிப்பில் வந்திருக்கும் படம் தலைக்கூத்தல் கட்டிட வேலைகளில் சிறந்த விளங்கும் சமுத்திரகனியும் அவர் தந்தையும் ஒரு கட்டத்தில் தந்தை விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகி விட தந்தையை பார்க்கும் நோக்கத்தில் கட்டிட வேலையை விட்டுவிட்டு இரவு செக்யூரிட்டி வேலைக்கு செல்கிறார்
சமுத்திரகனி பகலில் தன் தந்தையை கவனித்துக் கொள்கிறார் ஆனால் ஊர் மக்களும் அவர் மாமனாரும் மனைவியும் தலைக்கூத்தல் மூலம் உயிரைப் பறிக்க சமுத்திரகனியிடம் வலியுறுத்திகின்றனர் தந்தை மேல் இருக்கும் பாசத்தினால் அவர் அதற்கு மறுக்கிறார்
அதனால் குடும்ப வாழ்க்கை பிரச்சினை ஏற்படுகிறது மனைவி பிரிந்து செல்ல இருதலைக்கொல்லி இரும்பாக தவிக்கும் சமுத்திரகனி எடுத்த முடிவு என்ன இதுதான் தலைக்கூத்தலின் கதைக்களம்
கிராமங்களில் இது போன்ற சம்பவங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன ஒரு மனிதன் எழுந்து நடமாட முடியவில்லை என்றால் பணம் இருப்பவன் செலவழித்து பார்த்துக் கொள்கிறான் பணமில்லாதவன் கடன் வாங்கிப் பார்த்துக் கொள்கிறான் அந்த கடன் எல்லை மீறும் போது என்ன செய்வது என்று தெரியாமல் வேறு வழி இல்லாமல் கருணை கொலை என்பதை தலைக்கூத்தல் அதாவது எண்ணெய் தேய்த்து தலை குளித்து பின்னர் இளநீர் குடித்தால் ஜன்னி வந்து மரணம் அது இயற்கை மரணம் போல் மக்களால் பார்க்கப்படுகிறது
பிறப்பும் இறப்பும் கடவுளின் செயல் ஆனால் உயிரைப் பறிப்பது அது கருணைக்கொலையாக இருந்தாலும் அது சட்டப்படி இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை
ஆனால் மக்கள் இப்படி அவஸ்தை படுவதை விட மரணமே அவருக்கு நிம்மதி கொடுக்கும் என்ற எண்ணத்தில் இச்செயலை செய்கின்றனர் இது சரியா தவறா என்பதை பற்றி இயக்குனர் தெளிவுபடுத்தவில்லை
சமுத்திரகனி மற்றும் நடித்த அனைத்து நடிகர்களும் நடிகைகளும் அருமையாக நடித்திருந்தாலும் இயல்பு தன்மையில்லாமல் ஒரு செயற்கையை போல் நமக்கு தெரிகிறது
தந்தையை பார்த்துக் கொள்ள சமுத்திரகனி கட்டிட வேலையை ஏன் விட வேண்டும் கடன் சுமை அதிகரிக்கும் போது நான்கு வேலை பார்க்க வேண்டும் ஆனால் இவர் இரவு செக்யூரிட்டி வேலை செய்கிறார் பகலில் தந்தையை பார்த்துக் கொள்கிறார் அதற்காகத்தான் அவர் வேலையை விட்டார் என்றால் அது ஏற்புடையதாக இல்லை
ஒரு அழுத்தமான கதைகளை எடுக்கும்போது அதற்கான தீர்வுகளை அல்லது தீர்வு காண வழிகளை கூறுவது பார்ப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்