spot_img
HomeNewsஸ்ரீதேவி- தி லைஃப் ஆஃப் எ லெஜண்ட்

ஸ்ரீதேவி- தி லைஃப் ஆஃப் எ லெஜண்ட்

ஸ்ரீதேவி- தி லைஃப் ஆஃப் எ லெஜண்ட்

ஸ்ரீதேவி இயற்கையின் சக்தி. தனது கலையை அவர் திரையில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தார். அதேசமயம், அவர் தனிமை விரும்பியாகவும் இருந்தார். தீரஜ்குமாரை ஸ்ரீதேவி தனது குடும்பத்தில் ஒருவராகவும் கருதினார். அவர் ஒரு ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர். ஸ்ரீதேவியின் அசாதாரண வாழ்க்கையை அவர் புத்தகமாக எழுதுகிறார் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
—போனி கபூர்.

இந்தியத் திரையுலகில் ஈடு இணையற்ற வாழ்க்கையைப் பெற்ற மிகச்சிறந்த சூப்பர் ஸ்டாரான ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை இந்தப் புத்தகம் தெரிவிக்க இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் கடந்த 50 வருடங்களில் 300க்கும் அதிகமான படங்களில் அவர் நடித்திருக்கிறார். அவர் பத்மஸ்ரீ, தேசிய திரைப்பட விருது, பல ஃபிலிம்ஃபேர் விருதுகள், மாநில அரசு விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.

2023 வெளியீடு

வெஸ்ட்லாண்ட் புக்ஸ்- Acquisition News

மதிப்பிற்குரிய வெஸ்ட்லாண்ட் புக்ஸ் எனது அறிமுக புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய லிட்டரரி ஏஜெண்ட் அனிஷ் சண்டி இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். போனி கபூர் மற்றும் அவரது குடும்பம், லதா மற்றும் சஞ்சய் ராமஸ்வாமி, சூர்யகலா, மகேஷ்வரி மற்றும் கார்த்திக், ரீனா மற்றும் சந்தீப் மார்வா ஆகியோர் எனக்கு அளித்துள்ள ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
— தீரஜ் குமார்

இந்த புத்தகத்தில் முதலில் என்னை ஈர்த்தது அதன் பின்னால் இருக்கக்கூடிய ஆராய்ச்சிதான். ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்துடன் தீரஜ் குமாருக்கு இருக்கக்கூடிய நட்பு ஸ்டார் ஸ்ரீதேவியின் தனிப்பட்ட உலகத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவுகிறது. ஸ்ரீதேவி எனும் ஐகானைப் பற்றி வாசகர்கள் இன்னும் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது.
— சங்கமித்ரா பிஸ்வாஸ், நிர்வாக ஆசிரியர், வெஸ்ட்லாண்ட் புக்ஸ்

இந்தியாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதேவி குறித்தான இந்தப் புத்தகத்தில் எந்தவொரு விஷயத்தையும் விட்டுவைக்காமல் 360 டிகிரியிலான விஷயத்தை தீரஜ் கொடுத்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த பயோகிராஃபிஸை கொடுத்த வெஸ்ட்லாண்ட் இந்தப் புத்தகத்தை பப்ளிஷ் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
— அனிஷ் சண்டி, தி லேப்ரின்த் ஏஜென்சி.

Must Read

spot_img