spot_img
HomeNewsஅதர்வா நடிக்கும் 'தணல்'

அதர்வா நடிக்கும் ‘தணல்’

அன்னை ஃபிலிம் புரொடக்‌ஷன் எம். ஜான் பீட்டர் வழங்கும் அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘தணல்’

வணிகரீதியாக அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் நடிகர் அதர்வா முரளி தற்போது புதிய படமான ‘தணல்’ வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறார்

நடிகர் அதர்வா முரளி, தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார். நகர்ப்புற மற்றும் கிராமப்புற படங்கள் என அனைத்து வகையான கதைகளிலும் நடித்து உலகம் முழுவதும் உள்ள சினிமா பார்வையாளர்களுக்குப் பிடித்த ஒருவராக உள்ளார். ‘பட்டத்து அரசன்’ படத்தில் இயல்பாக பக்கத்து வீட்டுப்பையன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தற்போது ‘தணல்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னை ஃபிலிம் புரொடக்சன், எம். ஜான் பீட்டர் தயாரிக்கிறார்.

‘100’ & ‘ட்ரிக்கர்’ போன்ற படங்களில் சரியான கதையில் போலீஸ் கதாபாத்திர தோற்றத்திற்காக அதர்வா வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வலி உன்னை ஹீரோவாக்கும் அல்லது வில்லனாக்கும்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து உருவாகும் படம்தான் ‘தணல்’.

காப் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் ‘தணல்’ படத்தில், லாவண்யா திரிபாதி கதாநாயகியாகவும், அஷ்வின் காக்குமானு எதிர்மறையான கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஷா ரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி பிரியா, பரத், தௌபிக், சர்வா, பிரதீப் விஜயன் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் ஆடியோ, ட்ரைய்லர் மற்றும் திரையரங்குகளில் படம் வெளியாகும் தேதி போன்றவை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:

இயக்குநர்: ரவீந்திர மாதவா,
ஒளிப்பதிவு: சக்தி சரவணன்,
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்,
படத்தொகுப்பு: கலைவாணன்,
ஸ்டண்ட் மாஸ்டர்: ஆர்.சக்தி சரவணன்,
கலை இயக்குநர்: எஸ். அய்யப்பன்,
பாடலாசிரியர் – விவேக், கார்த்திக் நேதா

Must Read

spot_img