spot_img
HomeNewsஇயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் இணையும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் இணையும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் இணையும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

‘தேஜாவு’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் திரைப்படத்தை ழென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழும் ஆர்கா என்டெர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.

அஸ்வின் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, பட தொகுப்பாளராக அருள் சித்தார்த் ஆகியோர் ஒப்பந்தம் செயப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ‘கிடாரி’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘முதல் நீ முடிவும் நீ’ ஆகிய படங்களில் தனது பாடல்கள் மூலம் முத்திரையை பதித்து இசை ரசிகர்களை தன் வசப்படுத்திய தர்புகா சிவா இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் பணியாற்றுவது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும், மேலும் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பக்கபலமாக அமையுமென்று தயாரிப்பாளர் புகழ் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், வரும் நாட்களில் அது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read

spot_img