நாயகி ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்துள்ள படம் இன் கார்.
ஊரில் ஒரு பிரச்சனையின் சிக்கி சிறைக்குச் சென்ற தன்னுடைய தம்பியை மீட்டு வேறு ஒரு ஊரில் தங்க வைப்பதற்காக தனது மாமாவுடன் பயணிக்கிறார் அவரது அண்ணன். இவர்களது ஜீப் ரிப்பேர் ஆகிவிட வழியில் வரும் வயதான ஒருவரின் வாகனத்தை நிறுத்தி அவரை மிரட்டி அதில் பயணிக்கின்றனர்.இந்த மூவரும்
போகும் வழியிலேயே தம்பியின் பாலியல் இச்சை தொந்தரவு தாங்காமல் வழியில் எதிர்படும் இளம்பெண் ரித்திகா சிங்கை காரில் கடத்துகின்றனர். தங்களது பகுதிக்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிடுகின்றனர்.அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்று தோற்றுப்போய் மீண்டும் அவர்களிடமே சிக்குகிறார் ரித்திகா சிங். வயதான அந்த டிரைவராலும் ரித்திகா சிங்கை காப்பாற்ற முடியாத சூழல்
. இந்த நிலையில் அவர்களிடமிருந்து ரித்திகா சிங் தப்பினாரா ? இல்லை அவர்களின் தாக்குதலுக்கு இரையானாரா என்பது பரபரக்க வைக்கும் கிளைமாக்ஸ்
குறிப்பாக இளம் பெண்கள் கடத்தப்படுகிறார்கள் என்று நாம் இதுவரை செய்திகளாக மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி ஒரு பெண் கடத்தப்பட்டால் என்ன விதமான மன உளைச்சலுக்கு ஆளாவாள், கல் மனதையும் கரைய வைக்கும் விதமாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹர்ஷவர்தன்
பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வெகு கச்சிதமாக தனது கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் ரித்திகா சிங். ஒரு காருக்குள்ளேயே இரண்டு ஆண்களுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு படம் முழுவதும் பயணிக்க வேண்டிய அந்த இக்கட்டான சூழலையும் தப்பிப்பதற்காக ஒரு வழி கிடைக்காதா என ஏங்கும் மனதையும் பல காட்சிகளில் பார்வையாலையே வெளிப்படுத்தி உள்ளார் ரித்திகா சிங்.
மற்ற கதாபாத்திரங்களான சந்திப் கோயட், மனிஷ் ஜஞ்சோலியா, ஜியான் பிரகாஷ் உள்ளிட்டோர் மிகவும் எதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளனர்,
சில அருவருக்கத்துக்கு காட்சிகளும் உள்ளன காருக்குள்ளேயே நாயகி சிறுநீர் கழிப்பது அபத்தமான வசனங்கள் அருவருக்கத்தக்க சில காட்சி அமைப்புகள் நம்மை வெளியே வைக்கின்றனர் ஆனால் ஒன்று ஏ சர்டிபிகேட் என்பதால் சிறுவர்கள் பார்க்க வாய்ப்பு இல்லை
இன் கார் இம்சை
Cast and Crew :
Ritika Singh
Sandeep Goyat
Manish Jhanjholia
Gyan Prakash
Production House : Inbox pictures
Produced By : Anjum Qureshi, Sajid Qureshi
Presented by : Studio Green K. E. Gnanavelraja
Written and Directed By : Harsh Warrdhan
Dop : Mithun Gangopadhyay
Music : Mathias Duplessy
Art : Chetan Sagar
Editor : Manik Diwar
Action : Sunil Rodrigues
PRO : Sathish Kumar (AIM)