சேட்டு வீட்டு பெண்ணான ஐஸ்வர்யா தத்தா மீதுநரிக்குறவர் கூட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஜூனியர் எம் ஜி ஆர். , காதல் ஆகிறார் ஜூனியர் எம் ஜி ஆர். ஆனால் ஐஸ்வர்யா தத்தாவோ திருமண பந்தம் எதிலு நுழைய மனமில்லாமல், சாமியாராக போகிறார் என்கிற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைகிறார் ஜூனியர் எம் ஜி ஆர்.அவருக்காக அவரது நண்பர்கள் ஐஸ்வர்யா தத்தாவை கடத்தி வர, ஒரு படகில் நடுக்கடலுக்கு சென்று விடுகிறார்கள் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா தத்தா இந்த செயலை விரும்பாவிட்டாலும், போகப்போக ஜூனியர் எம்ஜிஆர் மீது காதல் ஆகிறார்.நடுக்கடலில் போட் ரிப்பேர் ஆகி நின்றுவிட உதவிக்கு ஆள் இல்லாமல் தவிக்கிறார்கள். புயல் மழையில் சிக்கி ஒரு தீவில் ஒதுங்குகிறார்கள். இவர்கள் ஊருக்குள் வந்தால் கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டுகிறது. ஜூனியர் எம் ஜி ஆரையும் ஐஸ்வர்யாவையும் கொலை செய்ய அவரது மாமா திட்டமிடுகிறார். இவர்கள் சிக்கிக்கொண்ட தீவிற்கே அவர்களை கொல்ல ஆட்களை அனுப்புகிறார்.ஜூனியர் எம்ஜிஆர், ஐஸ்வர்யா மற்றும் நண்பர்கள் தீவிலிருந்து தப்பித்தார்களா ? ஐஸ்வர்யாவின் மாமாவின் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்பித்தார்களா ? என்ன நடந்தது என்பது கிளைமாக்ஸ்.படத்தின் நாயகன் ஜூனியர் எம்ஜிஆர் கட்டுமஸ்தான உடலுடன் காட்சியளித்தாலும் இடைவேளைக்கு பின்பு தான் அவருக்கான வேலையே ஆரம்பிக்கிறது. அதுவரை படத்தை யோகிபாபு, சென்ராயன் இருவரும் தாங்கிப் பிடித்து கலகலப்பாக நகர்த்திச் செல்ல உதவி செய்திருக்கிறார்கள். ஜூனியர் எம்ஜிஆர் கிளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் ஆக்சன் காட்சிகளில் தன்னை யார் என நிரூபித்து இருக்கிறார். ஐஸ்வர்யா தத்தா அழகு பொம்மையாய் வந்து நடிக்கவும் செய்து கவர்ச்சியும் காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கிறார். நாயகன், நாயகி, வில்லன் என யாராக இருந்தாலும் சகட்டுமேனிக்கு கலாய்த்து காமெடி பண்ணுகிறார் யோகி பாபு. கிளைமாக்ஸுக்கு முன்னதாக அவர் முடிவு தான் பரிதாபப்பட வைக்கிறது.இவர்களின் கூட்டத்தில் வரும் மற்ற நண்பர்களும் தங்களால் இயன்றதை செய்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் சம்பத் ராம், வில்லன் சேட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷாஜி சவுத்ரி இருவரும் கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவி இருக்கிறார்கள்.கடல் சம்பந்தப்பட்ட காட்சிகளை, புயலில் படகு சிக்கி தடுமாறும் காட்சிகளை, ஒளிப்பதிவாளர் லெனின் பாலாஜி அவ்வளவு தத்ரூபமாக படமாக்கி இருக்கிறார். அதற்காக அவரை ஸ்பெஷலாக பாராட்டலாம். படத்தின் இயக்குனர் கீரா காதலை மட்டுமே மையப்படுத்தி அதேசமயம் இதை ஒரு அட்வென்ச்சர் த்ரில்லர் போல கொடுப்பதற்கு முயற்சித்திருக்கிறார்