ஆடுகளம் முருகதாஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ராஜா மகள் செல்போன் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருக்கும் முருகதாஸ் தன் மகள் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருப்பவர் தன் மகள் இதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் உடனே வாங்கித் தரும் மனப்பக்குவம் கொண்டவர் அப்படி இருக்கையில் பள்ளியில் படிக்கும் முருகதாஸின் மகள் சக மாணவனின் பிறந்தநாள் விழாவிற்கு அவன் வீட்டிற்கு செல்லும்போது அந்த வீட்டை போல் எனது பிறந்த நாளையும் அதேபோல் இருக்கும் வீட்டில் கொண்டாட வேண்டும் அது போன்ற வீடு வாங்கித்தா என்று தந்தையிடம் கேட்க மறுக்க இயலாத தந்தை வாங்கித் தருகிறேன் என்று உறுதி கூற இறுதியில் முருகதாஸ் வீட்டை வாங்கினாரா என்பதே கதை
தந்தை மகள் பாசப்பிணைப்பு அழகாக சொல்லி இருக்கும் இயக்குனர் தான் சொல்ல வந்த கருத்து என்ன என்பதை தெளிவாக சொல்லவில்லை ஒரு காட்சியில் வாடகைக்கு தர வழி இல்லாமல் ஒரு குடும்பம் வீட்டை காலி செய்து கொண்டு போகிறது இந்த காட்சி ” நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு ”என்ற பாடலை நமக்கு நினைவு படுத்துகிறது
அதேபோல் நம்மையும் வாழ சொல்கிறாரா இயக்குனர் என்பது புரியவில்லை
சிறுமி பிரதிக்ஷா நடிப்பு நன்றாக இருந்தாலும் வயதுக்கு மீறிய முகபாவங்களை பார்க்கும் போது சிறுபிளைத்தனம் அவரிடம் தெரியவில்லை
ஆடுகளம் முருகதாஸ் அன்பு பாசம் இயலாமை இல்லாமை என பல வித பாவங்களை நம் முன் கொண்டு வந்து சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து விட்டார்
ஆனால் படத்தில் 80 சதவீத காட்சிகளில் நெகட்டிவ் எனர்ஜி தெரிகிறது பாசிட்டிவ் எனர்ஜி இல்லை
ராஜா மகள்– எதார்த்தத்தில் உண்மை –நிஜத்தின் நிழல்