இரண்டு ஆராய்ச்சி மாணவர்கள் பேராசிரியர்,எழுத்தாளர் மித்ரனை சந்தித்து 2020ல் பெரிய கேங்ஸ்டரான குருவிராஜனைப் பற்றி ஆராய்சிசி கட்டுரை எழுத குறிப்புகளை கேட்கின்றனர். கதைக்களம் பின்னோக்கி நகர்கிறது
சிறு வயதில் கேங்ஸ்டர் அன்வர் பாயிடம் தஞ்சமடையும் ராஜன், தன் திறமையாலும், கடின உழைப்பாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக முடிக்க, அனைத்து அன்டர்; கிரவுண்ட் வேலைகளுக்கு இவரை நாடுகின்றனர். இதனால் அன்வர் பாய் கோபமடைய, அவரையே ஒரு தருணத்தில் போட்டுத்தள்ளி, பெரிய கேங்ஸ்டராக உருவாகி குருவி ராஜன் என்ற பெயருடன் நிழல் உலகமே பயப்படும் அளவிற்கும், பெரிய கேங்ஸ்டராக உருவெடுக்கிறார்.
அதே சமயம் மற்றோரு நபர் ஷெரிப்பிற்கு 27 வயதிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற ஐந்து லட்சம் தேவைப்படுகிறது. இதனால் பணம் புரட்ட முடியாமல் சோகத்தில் இருக்கும் , நேரத்தில் எதிர்பாராதவிதமாக குருவிராஜனை அவர் கேங்க்ஸ்டர் என்று அறியாமலேயே தாக்கி விடுகிறார் ஷெரிப் கோவிந்திடம் தஞ்சமடைகிறார். அதன் பின் . நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாகும் எதிர்பாராத திருப்பங்களுடன் தந்திருக்கிறார் இயக்குனர் மணிவண்ணன்
ஷாரா, விஜே ஆஷிக், அர்ஜை ஆகிய மூன்று பேரை சுற்றியே கதைக்களம் நகர்கிறது. இதில் அர்ஜை கொலை செய்யும் போதெல்லாம் பத்து செகண்ட் டைம் கொடுத்து கொலை செய்கிறார் அது மட்டுமல்ல கொலை செய்யும் போது எல்லாம் நான் கேங்ஸ்டர் இல்ல கில்லர் என்று கூறுகிறார் கூட்டமாக ரவுடிகளை வைத்துள்ளார் அதுதான் ஒன்றும் புரியவில்லை
. ஆஷிக் செய்யும் நகைச்சுவை ஷாராவுடன் சேர்ந்து செய்யும் அளப்பரை கவனிக்க வைத்து அவரது நடிப்பு ஈர்க்கிறது. ஷாரா அதுவும் -வசந்த காலம் -மழைக்காலம்- இலையுதி காலம்- என காலம் மாற தொழிலும் மாறிக்கொண்டே இருக்கிறது அதை அவர் சொல்லும் விதமும் அதில் ஒளிந்திருக்கும் உண்மையும் நம்மை சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறது
இவர்களுடன் ராஜ்குமார் ஜி – பேராசிரியர் மித்ரன், சுரேஷ் சக்ரவர்த்தி – துறவி, மணி வைத்தி, மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர்
கேங்ஸ்டார் கதையை நகைச்சுவை கலந்து அதுவும் படத்தின் அறுபது சதவீதம் ரூமுக்குள் நடக்கும் விதமாக செய்துள்ளார் இயக்குனர் மதிவாணன்.
சூட் தி குருவி- குறைந்த பட்ஜெட்டில்- ஒரு நிறைவான படம்