spot_img
HomeNewsசெங்களம் விமர்சனம்*

செங்களம் விமர்சனம்*

மாநில அரசியலை மாவட்ட அரசியலுக்குள் அடக்கி திராவிட கட்சிகளின் அரசியல் சூழ்ச்சிகளையும் பதவியைப் பிடிக்க செய்யும் குள்ளநரித்தனத்தையும் நாம் ரசிக்கும்படி தந்திருக்கிறார் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன்

கதைக்களம் விருதுநகர் மாவட்டத்தில் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் அரசியல்வாதி நகராட்சி சேர்மன் ஆக அந்த குடும்பத்தில் ஒருத்தர் மட்டுமே இருந்து வருவதால் அதை மாற்ற மாநில கட்சிகள் பல சாணக்கிய வேலைகளை செய்ய அதை முறியடித்து வெற்றி வாகை சூடி வரும் நகராட்சி சேர்மன் தேன்நிலவுக்காக செல்லும்போது விபத்தில் சிக்கி மரணம் அடைகிறார் அடுத்த சேர்மன் யார் என்ற போட்டியில் மாநில கட்சியும் மாவட்ட கட்சியும் போட்டி போட்டு களமிறங்க சேர்மன் தேர்தல் நடுநிலையாகி விட மரணமடைந்த சேர்மனின் கவுன்சிலர்பகுதியில் யார் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்களோ அவர்களே அடுத்த சேர்மன் என்ற நிலையில் பணம் தண்ணீராக செலவு செய்யப்படுகிறது மாவட்ட கட்சியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது தன் மகனையா தன் மகளையா தன் மருமகளையா என்ற குழப்பத்தில் தலைவர்சரத் லோகித்ஸ்வா இருக்க மருமகளின் அரசியல் சாணக்கியத்தனத்தால் அவர் வேட்பாளராகி வெற்றி பெற்று சேர்மன் ஆகிறார்
இது ஒரு புறம் இருக்க கலையரசன் சகோதரர்கள் மூன்று கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கின்றனர் இன்னும் மூன்று கொலைகள் பாக்கி இருப்பதால் அதை முடித்துவிட்டு போலீசில் சரண் அடைவதாக கூற போலீசார் அவர்களை சுட்டுப் பிடிக்கும் முயற்சியில் செயலில் இருங்க அதில் பிடிபடாமல் அடுத்தடுத்ததாக கொலைகளை செய்து வருகின்றனர் கலையரசன் சகோதரர்கள் ஆறாவது கொலை செய்யும்போது அந்த நபர் கூறும் செய்தி நமக்கு ஒரு பெரும் அதிர்ச்சியை தெரிகிறது

மாவட்ட அரசியல் குடும்பத்திற்கும் கலையரசன் சகோதரர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை இறுதிக்காட்சி நமக்கு தெளிவு படுத்துகிறது

கதைக்களத்தில் அன்று இன்று என ஒவ்வொரு எபிசோடிலும் நிகழ்காலமும் கடந்த காலமும் மாறி மாறி வருகிறது அதை அழகாக கையாண்டு எபிசோடில் ஒன்றாக்கி கதையை சொல்லும் விதம் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் மிக அழகாக திரைக்கதையை தெளிவாகவும் பரபரப்பாகவும் நம்மை கொண்டு செல்கிறார்.

.

இரண்டு மணி நேரம் சினிமா பார்ப்பதற்கே அலுத்துக் கொள்ளும் ரசிகர்களை கிட்டத்தட்ட 9 எபிசோடுகள் வரை தொடர்ந்து பார்க்க வைக்க வேண்டும் என்றால் கதையும் திரைக்கதையும் எவ்வளவு வலுவாக இருக்க வேண்டும் என்பதை இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். அதனால் இந்த ஒன்பது எபிசோடுகளையும் தொடர்ந்து பார்த்தாலும் எந்த இடத்திலும் பெரிய தொய்வு என எதுவும் இல்லாமல் அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன நடக்கும் என்கிற ஆர்வமும், எதனால் இந்த நிகழ்வுகள் நடக்கின்றன, இனிவரும் எபிசோடுகளில் அதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் இயல்பாகவே இந்த வெப் தொடரை பார்ப்பவர்களுக்கு ஏற்பட்டுவிடும்.
அதனால் வெறும் இரண்டு மூன்று எபிசோடுகளை பார்த்துவிட்டு பின்னர் பார்க்கலாம் என நினைப்பவர்கள் கூட ஒன்பது தொடர்களையும் பார்த்துவிட்டு தான் அடுத்த வேலைகளை கவனிப்பார்கள். அந்த அளவிற்கு விறுவிறுப்பு குறையாமல் 9 எபிசோடுகளையும் இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன்.
அடுத்ததாக இந்த கதையின் கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிகர்களை 100% கச்சிதமாக தேர்ந்தெடுத்ததற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம். இதுநாள் வரை நாம் பார்த்து வந்த கலையரசன் இந்த படத்தில் இன்னும் நடிப்பில் மெருகு கூடியிருக்கிறார். கோபமும் ஆவேசமும் கொண்ட இளைஞன் என்றால் இனி கலையரசன் முகம் தான் ஞாபகத்திற்கு வரும் என்பது போல தன்னுடைய கதாபாத்திரத்திற்கு நடிப்பால் வலு சேர்த்து இருக்கிறார்.
வாணி போஜன் இதில் அரசியலில் கைதேர்ந்த ஒரு பெண்மணியாக தனது கதாபாத்திரத்தை வெகு அழகாக பிரதிபலித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல அவருக்கு துணையாக தோழியாக நடித்திருக்கும் ஷாலி நிவேகாஸ் புதுமுகம் என்றாலும் தனது நடிப்பில் அது துளியும் வெளிப்படாமல் எதார்த்தமாக, கொஞ்சம் கம்பீரமாகவே தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரின் காம்பினேசனை பார்க்கும் போதே இது உடன்பிறவா சகோதரிகள் என்கிற கோணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இதுநாள் வரை வில்லனாக பார்த்து வந்த நடிகர் பவன் இதில் பாசிட்டிவான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நம்மை அதிகம் கவர்ந்து விடுகிறார்.

அரசியல்வாதியாக வீல் சேரில் அமர்ந்தபடியே அரசியல் செய்யும் சரத் லோகித்ஸ்வா . எந்த இடத்திலும் இவரது கதாபாத்திரம் மீது நெகடிவ் இமேஜ் படியாமல் அழகாக இவரை சித்தரித்துள்ளார்கள். 
குடும்ப அரசியல், அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற மனப்பான்மை என அனைத்தும் இருந்தாலும் எந்தவித எதிர்மறை குணங்களும் இல்லாதபடி இவர்களது கதாபாத்திரங்களை சித்தரித்ததற்காகவே ஒரு சபாஷ் சொல்லலாம்.

அது மட்டுமஅல்ல கிராமத்து அரசியல்வாதி என்றாலே வேலா ராமமூர்த்தி நடிப்பு பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு எதார்த்தமாக பின்னி இருக்கிறார். 
மேலும் அவரது பிஏவாக வரும் பகவதி பெருமாள், மாவட்ட செயலாளர் ஆக வரும் முத்துக்குமார், கலையரசனின் தம்பிகளாக வரும் டேனியல் போப், லகுபரன், கோபக்கார போலீஸ் அதிகாரியாக வரும் அர்ஜய், கான்ஸ்டபிளாக வரும் சூப்பர் குட் சுப்பிரமணி என ஒவ்வொரு கதாபாத்திரமுமே இந்த கதைக்கு முக்கியமானது. அதை திறம்பட அனைவருமே செய்திருக்கிறார்கள். இன்னும் குறிப்பாக கலையரசனின் அம்மாவாக நடித்த விஜி சந்திரசேகர் நடிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
இந்த வெப் தொடரின் இன்னும் இரண்டு தூண்களாக இருந்து தாங்கி பிடித்துள்ளவர்கள் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் மற்றும் அதிரடியான பின்னணி இசை அமைத்துள்ள தரண்குமார் இருவரும் தான். இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த வெப் தொடருக்கு இன்னும் விறுவிறுப்பை அதிகப்படுத்தி உள்ளனர்.
. இந்த தொடரின் இரண்டாவது சீசனுக்காக இப்போது இருந்தே தாராளமாக காத்திருக்கலாம்.

செங்களம்— 50 வருட தமிழக அரசியலின் கண்ணாடி

Must Read

spot_img