சிம்பு கௌதம் கார்த்திக் கௌதம் மேனன் பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் பத்து தல
டைட்டிலுக்கு விளக்கம் ஏ ஜி ராவணன் நாயகனின் பெயர் அதுதான் பத்து தல
கதைக்களம் தமிழகத்தின் தென்கோடி முக்கடலின் சங்க மிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப்பெரிய தொழிலதிபர் ஏ ஜி ஆர் இவர் தொழில் அதிபர் மட்டுமல்ல
தாதாவும் கூட தமிழகத்தின் முதலமைச்சர் யார் என்பது நிர்ணயிக்கும் அதிகாரம் படைத்தவர்
தங்கையின் கணவர் தான் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார் முதலமைச்சரே கடத்துகிறது ஒரு கும்பல் அவர் என்ன ஆனார் என்பதை விசாரிக்க ரவுடி போர்வையில் அண்டர் கவர் ஆபிஸராக வருகிறார் கௌதம் கார்த்திக் துணை முதலமைச்சராக இருக்கும் கௌதம் வாசு மேனன் முதலமைச்சராக ஆகும் முயற்சி வீணாக வேறொருவர் முதலமைச்சராக
கடத்தப்பட்ட முதலமைச்சரின் நிலை என்ன
ஏ ஜி ஆரின் மணல் மாஃபியா ஒழிக்கப்பட்டதா
சிம்பு படம் முழுக்க கருப்பு வேஷ்டி கருப்பு சட்டை கருப்பு தாடியில் வெள்ளை முடி இதுதான் அவர் கெட்டப்’ காலா ரஜினி ‘ஞாபகப்படுத்துகிறார்
படத்தின் நாயகன் அவர் தான் என்றாலும் இடைவேளைக்கு 10 நிமிடத்திற்கு முன்புதான் வருகிறார் இடைவெளிக்குப்பின் அவர் ராஜ்ஜியம் தான் வழக்கமான அலட்டல் இல்லாமல் பண்பட்ட ஒரு முதிர்ந்த நடிப்பாற்றலை நம் கண் முன் கொண்டு வருகிறார் வசனங்களில் அனல் பறக்க பேசுகிறார்
கன்னியாகுமரியில் இவர் நடத்தும் மணல் மாஃபியா எதிராக போராட்டத்தில் இறங்கும் அனாதை ஆசிரமம் மக்கள் அனைவரும் அந்த ஆசிரமத்திற்கு இவர்தான் நிதி உதவி செய்கிறார் என்பதை அறிந்து அவர் வீட்டு முன் கூடி அவரை புகழ்ந்து பாடி இகழ்ந்ததற்கு மன்னிப்பு தேடி கதறிகளும் காட்சிகள் ஒரு கதாநாயகன் கூறிய பில்டப் காட்சியாக இருந்தாலும் பணம் கொடுத்தால் தவறுகள் கூட நியாயமாகலாம் என்ற தவறான கண்ணோட்டத்தை இயக்குனர் நமக்கு சொல்லி இருப்பது வருந்தத்தக்கது
சிம்புவிடம் மணல் கொள்ளையை விடும்படி சொல்லும்போது நான் விட்டால் மற்றவர்கள் மணல் கொள்ளை அடிக்க மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை எனக்கு தர முடியுமா என்று கேள்வி எழுப்பி தன் பக்க நியாயத்தை நியாயமாக சொல்லி தவறை சரி செய்வது தவறானது
படத்தில் அவருக்கு ஜோடி இல்லை என்பதால் சாய்ஷாவை ஒரு குத்துப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு நம்மளை குதிக்களிக்க வைக்கிறார் இயக்குன
ர் ஏ ஆர் ரகுமான் பாடும் அக்கறையிலே பாடலுக்கு சிம்பு நடனம் சிறப்பு
நாயகி ப்ரியா பவானி சங்கர் படத்திற்கு ஒரு நாயகி தேவை என்பதால் இந்தப் படத்தில் ப்ரியா பவானிசாகர் நடித்திருக்கிறார் பாவம் கொடுத்த வலியை சரியாக செய்திருக்கிறார்
கௌதம் கார்த்திக் சொல்லப்போனால் படத்தின் நாயகன் இவர்தான் எதிர் நாயகன் தான் சிம்பு அப்படிதான் படம் பார்க்கும் நமக்கு தோன்றுகிறது
மற்றும் கௌதம் மேனன் அவருக்குத் தந்த வில்லத்தனத்தை வில்லத்தனமாக செய்து வருங்கால தமிழ் சினிமா உலகின் தவிர்க்க முடியாத வில்லனாக அவதாரம் எடுப்பதில் நமக்கு ஐயமில்லை
ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை அவர் இசையமைத்த பல படங்களின் பின்னணி இசையை ஞாபகப்படுத்துகிறது கிளைமாக்ஸ் காட்சி நம்ப முடியாத காட்சியாக இருந்தாலும் சினிமா என்பதால் நாம் நம்புகிறோம்
பத்து தலை— வெத்து தல