புஷ்பா 2′ The Rule has begun!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா’ படக்குழு #HuntForPushpa என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ‘Pushpa 2: The Rule’ படத்தின் தனித்துவமான கான்செப்ட் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம், ஒரு பான்-இந்தியா திரைப்படம் என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்து அனைத்து எல்லைகளையும் உடைத்தது. ஒரு சாதாரண மனிதனை உலகளாவிய நாயகனாக இந்த கதை நிலை நிறுத்தியது. இப்போது, ’புஷ்பா 2’ திரைப்படம் உலக அளவில் இந்தியத் திரைப்படத்திற்கான அர்த்தத்தை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது. #WhereIsPushpa? என்ற ஹேஷ்டேக்குடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கான்செப்ட் வீடியோவின் க்ளிம்ப்ஸை தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து இரண்டாம் பாகத்தின் மீது ஆர்வமும், அடுத்தடுத்த அப்டேட் தொடர்பான கோரிக்கையும் வந்த வண்ணமே உள்ளது, ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில், ’புஷ்பா 2: தி ரூல்’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இது உண்மையிலேயே ’புஷ்பா’ ஆட்சியின் ஆரம்பம்.
புஷ்பாவின் கதையும் எழுச்சியும் இரண்டாம் பாகத்தில் இன்னும் தீவிரமாக இருக்கும். ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தின் தனித்துவமான சித்தரிப்பு, உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் இயக்குநர் சுகுமார் திரையில் உருவாக்கிய காட்சிகள் ஒரு புயலைப் போல மீண்டும் மக்களை திரையரங்குகளுக்கு எடுத்து வரும் என்பதில் சந்தேகம் இல்லை. ’புஷ்பா’ ஒரு திரைப்படம் என்பதைக் காட்டிலும் அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மூலம் மக்களின் குரலாக, ஒரு பாப்-கலாச்சாரமாக மாறியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் முதல் பிரபலங்கள், அரசியல்வாதிகள் வரை அனைவரும் மேடைகளில் ’புஷ்பா’ ரெஃபரன்சை பயன்படுத்தியுள்ளனர்.
’புஷ்பா’ படத்தின் தொடர்ச்சியான ’புஷ்பா 2: தி ரூல்’ எப்படி இருக்கும் என்ற ரசிகர்களின் கற்பனையை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த வீடியோவில் காட்சிகளை அமைத்துள்ளனர். இப்படம் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் கவனிக்கத்தக்க ஒரு படமாக மாறும் என்பது தெளிவாகத் தெரிகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் ஆகியோர் ’புஷ்பா: தி ரூல்’ படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.