ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் என் எஸ் பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் புகழ் ரேவதி மற்றும் பலர் நடிக்க வெளியாகி இருக்கும் படம் ஆகஸ்ட் 16 1947
இந்தியாவிற்கு 1947 ஆகஸ்ட் 15 சுதந்திரம் கிடைத்தது அனைவரும் அறிந்ததே ஆனால் செங்காடு என்னும் கிராமத்திற்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி தான் தெரிகிறது அதற்குள் ஒரு காதல் சொல்லிருக்கிறார் இயக்குனர்
கதைக்களம் 1947 ஆகஸ்ட் 11ஆம் தேதி கதை ஆரம்பிக்கிறது இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு எடுத்து அதை அறிவிக்கும் நேரத்தில் இங்கு உள்ள வளங்களை கொள்ளை அடிக்கும் நோக்கில் சில பல விஷயங்களை செய்ய அதில் விருதுநகர் பக்கத்தில் இருக்கும் செங்காடு கிராமத்தில் நடைபெறும் பருத்தி நூல் உற்பத்தியில் நல்ல லாபத்தை பார்க்கும் தொழில் என்பதால் அந்த தொழிலில் இந்தியாவிடம் கமிஷன் கேட்க முடிவு செய்து செங்காடு கிராமத்தின் ஆதிக்கம் செய்து வரும் ஆங்கிலேரியிடம் தகவல் சொல்லி அவரை தலைமை இடத்துக்கு வர சொல்லுமாறு ஆய்வாளரிடம் ஆங்கிலேய அதிகாரி உத்தரவிடுகிறார்
இந்நிலையில் செங்காடு கிராமத்தில் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் ஆங்கிலேயன் ராபர்ட் மற்றும் அவர் மகன் ஜஸ்டின் அங்கு செய்யும் அட்டூழியங்கள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல மக்களை அடிமையாக்கி பதினாறு மணி நேரம் வேலை செய்ய சொல்லி கொடுமைப்படுத்தும் நேரத்தில் அவர் மகன் அங்கு இருக்கும் வயது வந்து பெண்களை விட்டு வைக்காமல் பாலியல் வன்கொடுமை செய்ய
வயது வந்த பெண்களை அங்கு இருக்கும் மக்கள் சிலர் தங்கள் பெண் பிள்ளைகளை கௌரவ கொலைகள் செய்கின்றனர் இந்நிலையில் அந்த ஊர் ஜமீன்தார் தன் மகள் சிறுவயதில் இறந்து விட்டதாக கூறி யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து வளர்க்கிறார் அந்தப் பெண்ணின் மீது கௌதம் கார்த்திக்கு காதல் வர ஜமீன்தார் பெண் உயிரோடு இருப்பதை அறிந்த ஜஸ்டின் அவளை படுக்கைக்கு அழைக்க கௌரவ கொலை செய்ய ஜமீன்தார் முடிவு செய்ய அவளைக் காப்பாற்றி ஆங்கிலேயர் வீட்டிலே பாதுகாப்பாக வைக்கிறார் கௌதம் கார்த்திக்
இந்த நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்ததை ஆங்கிலேரியிடம் கூறும் ஆய்வாளர் அவரை தலைமை இடத்துக்கு வர சொல்ல இந்தியா சுதந்திரம் அடைந்ததை கிராம மக்களிடம் கூற வேண்டாம் என்று கூறி தலைமையை நோக்கி பயணிக்க
வீட்டில் இருக்கும் நாயகியை கண்டுபிடித்த ஜஸ்டின் அவளை பலவந்தப்படுத்த நாயகன் அவனைக் கொள்கிறான்
பிறகு நடந்தது என்ன இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது அந்த மக்களுக்கு தெரிந்ததா தன் மகன் ஜஸ்டினை கொன்ற நாயகனை ராபர்ட் பழி வாங்குகிறானா என்பதை மிதிக்கதை
கௌதம் கார்த்திக் கோகுலத்து கண்ணன் போல் உணவை திருடி சாப்பிட்டு வாழ்க்கை நடத்தி வரும் தாயில்லா பிள்ளை ஆனால் அவருக்கு வரும் காதல் அதை சொல்ல முற்படும்போது நாயகியின் திருமண நிச்சயம் நாயகியை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் என பல பரிமாணங்களை நமக்கு அவர் வெளிப்படுத்தினாலும்
நாயகன் நாயகியின் உடல் மொழிகள் நமக்கு 1947 நினைவு படுத்தாமல் நிகழ்காலத்தையே நினைவுபடுத்தி இருக்கு
ஆங்கிலேய அரக்கனாக வரும் ராபர்ட் கதாபாத்திரமும் ஜாக்சன் கதாபாத்திரமும் சுதந்திரத்துக்கு முன் நடக்கும் அராஜகத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர் அருமையான தேர்வு
கிராமவாசியாக வரும் கலையரசன் நடிப்பு மிக அருமை சுதந்திரம் கிடைத்ததும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கும் அந்த முக பாவங்கள் சந்தோஷத்தின் வெளிப்பாடுகள் அனைத்தையும் அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்
அடுத்து நடிகர் புகழ் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் அதேசமயம் சுதந்திரம் கிடைத்த விஷயத்தை நாக்கு அறுபட்டவுடன் அவர் சொல்லும் முயற்சிக்கும் போது ஒரு பக்கம் பரிதாபமும் மறுபக்கம் அவர் அவர் கை அசைவுகளை வைத்து மற்றவர்கள் கூறும் வசனம் நகைச்சுவையாக இருக்கிறது
ஆனால் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பது நமக்குப் புரியவில்லை காதலை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறாரா
அல்லது சுதந்திரம் கிடைத்த செய்தி அறியாமல் தவிக்கும் கிராம மக்களின் பரிதாப நிலையை சொல்ல வருகிறாரா
அல்லது இந்தியனின் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகிறாரா என்பது சரியாக நமக்கு புரியவில்லை
புரிந்தவர்கள் நமக்குத் தெரியப்படுத்தவும்
அது மட்டும் இல்ல இசையும் நடனமும் நம்மை 1947 நினைவுபடுத்தவில்லை நிகழ்காலத்தையே நினைவு படுத்துகிறது
ஆகஸ்ட் 16 1947 நிஜமல்ல கதை