ஐஸ்வர்யா ராஜேஷ் லஷ்மி பிரியா கருணாஸ் மைம் கோபி மற்றும் பல நடிக்க வெளிவந்திருக்கும் படம் சொப்பன சுந்தரி
கதைக்களம் நகைக்கடையில் குலுக்கல் முறையில் காரை பரிசு பெற்ற ஐஸ்வர்யா காரை வரதட்சணையாக கொடுத்து தன் சகோதரியின் கல்யாணத்தை முடிக்கும் நேரத்தில் காருக்கு சொந்தக்காரன் நான் தான் என்று அவரது சகோதரன் கருணாஸ் பிரச்சினை செய்ய பிரச்சனை காவல் நிலையம் வரை செல்கிறது இந்த நிலையில்
காரில் சாராவும் லஷ்மி பிரியாவும் செல்லும்போது ஒரு குடிகாரனை காரில் இடித்து விட அவன் பிணத்தை டிக்கியில் போட்டு விடுகிறார்கள்
காவல் நிலையத்தில் இருக்கும் கார் எடுக்க ஒரு பக்கம் ஐஸ்வர்யா மறுபக்கம் கருணாஸ் என போட்டி போட பில் இருக்கிறதோ அவர்களுக்கு கார் சொந்தம் என காவல்துறை அதிகாரி சொல்ல அந்த நகை வாங்கியது கருணாஸ் காரில் பயணம் செய்த ஒருவர்
அவரின் வீட்டை கண்டுபிடித்து நகை பில்லை கைப்பற்றும் முயற்சியில் ஐஸ்வர்யாவும் கருணாசும் இறங்க ஐஸ்வர்யாவுக்கு வெற்றி கிடைக்கிறது இந்நிலையில் ஐஸ்வர்யாவும் கருணாசும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறேன் நகை பில்லில் இருக்கும் நபரை போலியாக செட்டப் செய்து காரை வெளி கொண்டு வந்து பங்கு போட்டுக் கொள்ளலாம் என முடிவெடுக்க ஆசாமி காவல் நிலையம் செல்ல அவன் போலி என்று தெரிய வருகிறது காவல் நிலையத்திலிருந்து காரை வெளியே எடுத்தார்களா கார் டிக்கிலிருக்கும் பிணம் என்னவாயிற்று என்பதை மீதி கதை
நாயகன் இல்லாத படம் என்பதால் படத்தின் முழு சுமையும் சுமக்கும் பொறுப்பு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இருப்பதால் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் நகைச்சுவை படம் என்பதால் ஆங்காங்கே லாஜிக் பாக்காமல் படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் நகைக் கடையில் வேலை செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கடையில் வேலை செய்யும் ஊழியருக்கு பரிசு போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து இது எப்படி என்பது தெரியவில்லை இதுபோல் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் காமெடி நடிகன் சாரா அவரை சரியாக பயன்படுத்தவில்லை முதலிலும் முடிவிலும் வருகிறார்
லஷ்மி பிரியா தன் பங்கை சிறப்பாக பணியாற்றியுள்ளார்
ஐஸ்வர்யா ராஜேஷ் தன் மேல் ஆசைப்படும் ஆய்வாளர் இடம் என்னை ரேப் செய்து விடுங்கள் என்று கூறுவதும் இறுதிக்காட்சியில் தன் தாயை விரகதாபத்தின் சத்தத்தை எழுப்புவது கேவலத்தின் உச்சம்
நல்ல நகைச்சுவை கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் திரைக்கதையில் கவனத்தை செலுத்தி இருந்தால் சொப்பன சுந்தரி ஒரு மிகப்பெரிய நகைச்சுவையான படம் என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்
சொப்பன சுந்தரி கனவு பலிக்காது