இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் பாரதிராஜா, அருள்நிதி நடித்துள்ள படம் திருவின் குரல்
கதைக் களம் வாய் பேச முடியாத அருள்நிதி தன் தந்தைக்கு கட்டுமான தொழிலில் உதவியாக இருந்து வருகிறார் இந்நிலையில் கட்டுமான தொழில் நடக்கும் இடத்தில் விபத்து ஒன்றில் தந்தை காயம் அடைய அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை எடுத்து வருகிறார்
அங்கு அராஜகம் செய்து கொண்டிருக்கும் லிப்ட் ஆப்ரேட்டர் கம்பவுண்டர் செக்யூரிட்டி வாட்ச்மேன் ஆகிய நால்வரும் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய நயவஞ்சகர்கள் அவர்களில் லிஃப்ட் ஆப்பரேட்டர் இடம் நடக்கும் தகராறு ஆபரேட்டரை அருள்நிதி அடித்து விட பழிவாங்கும் நோக்கில் அந்த நான்கு பேரும் அருள்நிதியின் தந்தையின் சிகிச்சை மாற்றி அவருக்கு ஏகப்பட்ட இடர் களைத் தர அவர்களை சமாளித்து தந்தையை அருள்நிதி காப்பாற்றினாரா அந்த நால்வரின் அராஜகத்திற்கு முடிவு என்ன இதுதான் மீதிக் கதை
அருள்நிதிக்கு வாய் பேச முடியாத கதாபாத்திரம் முகபாவங்களிலும் கை அசைவுகளையும் மட்டுமே பேசுகிறார் எந்த நாயகனும் நடிக்க தயங்கும் கதாபாத்திரம் அழகாக நேர்த்தியாக செய்து உள்ளனர் அருள்நிதி
பாரதிராஜாவுக்கு தந்தை கதாபாத்திரம் ஒரு நடுத்தர குடும்பத்தின் தந்தையாக வாழ்ந்து இருக்கிறார் மருத்துவமனையில் அவர் படும் வலிகள் நடுத்தர வர்க்கத்திற்கு உள்ள முக பாவங்கள் இயக்குனராக பாரதிராஜா கொடிக்கட்டியது போல் ஒரு நடிகனாகவும் தன் கொடியை பறக்க விட்டு வருகிறார்
நாயகி வழக்கம் போல் வருகிறார் காதல் செய்கிறார்
மருத்துவமனையில் வேலை செய்யும் அந்த நான்கு பேரும் சரியான தேர்வு நால்வரும் முன்னனி வில்லன்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் சிறப்பாக செய்து உள்ளனர்
பின்னணி இசை சாம் சி எஸ் அவர் இசையமைத்த பல படங்களில் இருந்து அவரை காப்பி அடித்திருக்கிறார்
ஆனால் ஒரு பொது மருத்துவமனையில் பல்லாயிரம் பேர் வேலை செய்யும் இடத்தில் இப்படிப்பட்ட அராஜகங்கள் நடப்பதை மற்றவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பார்களா என்பது ஒரு கேள்வி குறி
அந்த நால்வரின் குறிக்கோள் பணமா அல்லது பெண்ணாசையா என்பது சரியாக தெளிவுபடுத்தவில்லை
படத்தின் முன் பாதி நம்மை சீட்டு நுனிக்கு எடுத்து சென்றாலும்படத்தின் பின் பாதி பின்னடைவு தான்
அருள்நிதி நடிக்கும் படம் இந்த மாதிரி தான் இருக்கும் என்பதை போல் படங்கள் வருகின்றன அதை மாற்றி வேறு திசையில் பயணித்தால் வெற்றி நிச்சயம்
திருவின் குரல் —ஒலிக்கவில்லை