விமல் அனிதா சம்பத் மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் தெய்வ மச்சான் கதை களம் தன் தங்கை அனிதா சம்பத்துக்கு திருமணம் செய்ய விமல் சம்பந்தம் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு தடங்கல் வந்து நிச்சயதார்த்தத்தை நடக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது
மிகப்பெரிய ஜமீன்தார் குடும்பம் அனிதா சம்பத்தை பெண் பார்க்க வரும்போது மாப்பிள்ளை ஒரு வயதானவர் என்பதால் அவர்களை அவமானப்படுத்திவிட கோபத்தில் ஜமீன்தார் குடும்பம் அவர்களை பழிவாங்க முடிவு செய்கிறது
இந்நிலையில் அனிதா சம்மந்தத்திற்கு ஒரு நல்ல இடத்தில் நிச்சயம் நடக்க அதை தடுக்க ஜமீன்தார் குடும்பம் பல முயற்சிகள் இறங்க இந்நிலையில் விமலுக்கு அடிக்கடி கனவில் வரும் குதிரை வீரனின் வாக்கு பலித்துக் கொண்டே இருக்கிறது இன்னிலையில் அனிதா சம்மந்தத்துக்கு திருமணம் நடந்தால் மச்சான் இறந்து விடுவான் என்று வாக்கு சொல்ல திருமணத்தின் நிறுத்த விமல் முயற்சி செய்யும்போது எதிர்பாதர விதமாக திருமணம் நடந்து விடுகிறது தங்கையின் தாலியை காப்பாற்ற விமல் பல முயற்சிகளில் இறங்க மச்சான் உயிரை காப்பாற்ற முடிந்ததா இதுவே மீதி கதை
விமலுக்கு மன்னர் வகையறாக்கு பிறகு ஒரு குடும்பப் பாங்கான கதை விமல் தன் பங்களிப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் தன் மச்சானை காப்பாற்ற முதலிரவு அறையில் அவர் செய்யும் அட்டூழியம் பஸ்ஸில் செல்லும்போது பஸ் கீர் ராடை பிடித்துக் கொண்டு இரண்டாவது கீரிலே ஓட்ட சொல்வது என அவரின் அவர் நகைச்சுவை காட்சிகள் ஒரு யதார்த்தமான திரை கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்
விமலுக்கு நண்பனாக பாலா சரவணன் தன் பங்களிப்பையும் சிறப்பாக செய்திருக்கிறார் திரைக்கதை களம் நகைச்சுவை சார்ந்திருப்பதால் இயக்குனர் மார்டின் நிர்மல் குமார் அதை ரசிக்கும் படியாகவும் சிரிக்கும் படியாகவும் காட்சிகளை வடிவமைத்து படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறார் படத்தின் இறுதி காட்சி நாம் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு நகைச்சுவை திருப்பத்தை தந்து படத்தை நிறைவு செய்து இருக்கிறார்
தெய்வமச்சான் –ஒரு நகைச்சுவை அவியல்