நாக சைதன்யா கீர்த்தி செட்டி சரத்குமார் அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் கஸ்டடி
கதைக்களம் 1990 இல் ஆரம்பிக்கிறது 98 நிகழ்வுகள் ஆரம்பமாகிறது தெலுங்கானா மாநிலத்தில் ஒரு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் நாக சைதன்யா குடிபோதையில் காரில் விபத்து ஏற்படுத்திய இருவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைக்க அதில் ஒருவர் தன்னை சிபிஐ ஆபீஸர் என்று கூற மற்றொருவன் குற்றவாளி அவனை பெங்களூர் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று என்று கூறி ஒரு போன் நம்பரை தர அந்த நம்பரில் பேசிய நாக சைதன்யா அவர் சிபிஐ ஆபிசர் என்பதை புரிந்து கொண்டு அவரை விடுவிக்க முயற்சிக்கும் போது
காவல் நிலையத்தில் ஆய்வாளரும் மற்றும் சில சமூக விரோதிகள் சேர்ந்து சிபிஐ ஆபிரை கொலை செய்து விட குற்றவாளி அரவிந்த் சாமியை கோர்ட்டில் ஒப்படைக்கும் பொறுப்பை சாகும் தருவாயில் சிபிஐ ஆபிசர் நாக சைதன்யாவிடம் ஒப்படைக்க
காவல் நிலையத்தை பூட்டிவிட்டு குற்றவாளி அழைத்துக்கொண்டு புறப்படும் நாக சைதன்யாவை தடுக்க முதலமைச்சர் மாநிலக் காவல்துறை முழுவதும் இறக்கி தடுக்க
தடைகளை மீறி நாக சைதன்யா குற்றவாளியை கோர்ட்டில் ஒப்படைத்தாரா ஒரு குற்றவாளியை கொல்ல ஒரு முதலமைச்சர் ஏன் உத்தரவிட வேண்டும் என்பதை மீதிக் கதை
தமிழுக்கு நாக சைதன்யாவிற்கு இது முதல் படம் வரவேற்கிறது தமிழ் திரை உலகம் உங்களை
ஆனால் அவர் தந்தை நாகார்ஜுனா சாதித்ததை இவர் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் காவலர் கதாபாத்திரம் அவரின் உடல் மொழிக்கு ஒத்து வரவில்லை
சில காட்சிகள் மட்டும் காவலர் உடையில் வருவதால் தப்பித்து விடுகிறார் காதல் நேர்மை ஆக்சன் என அனைத்தும் கலந்த கதாபாத்திரம் என்பதால் அனைத்தையும் திறம்பட செய்திருக்கிறார்
நாயகி கீர்த்தி செட்டி ஆடலுக்கும் பாடலுக்கும் மட்டுமில்லாமல் கதையோடு வரும் கதாபாத்திரமாக உருவாக்கி படம் முழுவதும் அவர் பங்களிப்பை சிறப்பாக செய்யும்படி திரைக்கதை வடிவமைத்து இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு
அரவிந்த்சாமி ஆம் படத்தின் உண்மையான நாயகன் இவர்தான் அலட்டல் இல்லாமல் அசத்தலாக படம் பார்க்கும் நம்மை பரவசப்படுத்தி விடுகிறார்
காவல்துறை உயரதிகாரியாக சரத்குமார் கஞ்சி போட்ட காக்கி சட்டையில் கரையை பூசிக்கொள்ளும் கதாபாத்திரம் உடலில் விரைப்பு தொண்டையில் கரகரப்பு இதுவே அவர் சிறப்பு
பிரேம்ஜி அண்ணன் இயக்குனர் என்பதால் படத்தில் வாய்ப்பு மன்னித்து விடுவோம் பிரேம்ஜியை
முதலமைச்சராக பிரியாமணி மிடுக்காக நடந்தாலும் முதலமைச்சர் கதாபாத்திரம் ஒட்டவில்லை ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறது
பழம்பெரும் அரசியல்வாதியாக ஒய் ஜி மகேந்திரா காட்சிக்குறைவு என்றாலும் நடிப்பில் நிறைவாக செய்து இருக்கிறார் கடவுள் படத்திற்கு பூ வைத்துக் கொண்ட அவர் பேசும் காட்சி நான் நடிகர் திலகத்தின் வாரிசு என்பதை சொல்லாமல் சொல்கிறது
இசை இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா பாராட்டுகளை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்
முதலமைச்சர் மீது சிபிஐ விசாரணை
குற்றவாளியை கொலை செய்ய முதலமைச்சர் சதி
இதெல்லாம் பார்க்கும்போது யாரையோ இயக்குனர் மனதில் வைத்து திரைக்கதை அமைத்தது போல் தெரிகிறது
கதையை தமிழ்நாட்டில் நடப்பது போல் எடுத்தால் நிச்சயமாக பல பிரச்சினைகளை இயக்குனர் சந்திக்க நேரிடும் அதனால் கதை களத்தை ஆந்திராவுக்கு மாற்றி விட்டார்
ஆனாலும் இது போன்ற கதைகளை தெலுங்கில் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா பல படத்தில் நாம் பார்த்திருக்கிறோம் அதனால் கதையில் புதுமை இல்லை
சரி திரைக்கதையில் இயக்குனர் வெங்கட் பிரபு புதியதாக ஏதாவது செய்தி இருப்பார் என்று நினைத்தால் நமக்கு ஏமாற்றமே
கஷ்டம்+ அடி = கஸ்டடி