விஜய் ஆண்டனி காவியா தப்பூர் ராதாரவி ஒய் ஜி மகேந்திரன் யோகி பாபு மற்றும் பலர் நடிக்க இன்று வெளிவந்திருக்கும் படம் பிச்சைக்காரன் 2
கதைக்களம் ஏழாவது பணக்காரரான விஜய் குருமூர்த்தி அதாவது விஜய் ஆண்டனி
அவரிடம் சி இ ஓ வாக இருக்கும் ஹரிஷ்
விஜய் ஆண்டனி சொத்தை அபகரிக்க ஒரு பிச்சைக்காரன் மூளையை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி தன் வசப்படுத்தி சொத்தை அபகரிக்க முயல்கிறார் கூடவே ஒரு டாக்டரும் நண்பரும்
இந்த மூவரையும் விஜய் ஆண்டனி கொலை செய்து விட்டு மீண்டும் பிச்சை எடுக்க போகும் நிலையில் ஒரு சன்னியாசி நீ ஏழை மக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கிறது செல் என்று கூற மீண்டும் பணக்கார வாழ்க்கைக்கு திரும்புகிறார் விஜய் ஆண்டனி
அதன் பிறகு அவர் செய்தது என்ன அவரின் பணக்கார வேஷம் கலைந்ததா/?
பிச்சைக்காரனா?
என்று உடன் இருப்பவர்கள் தெரிந்து கொண்டார்களா?
விஜய் ஆண்டனி ஏழை மக்களுக்கு என்ன செய்தார் என்பதே மீதி கதை
பிச்சைக்காரன் வெற்றி தொடர்ந்து முன்னணி நாயகனாக அந்தஸ்து பெற்ற விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை நடித்து அவர் நிறுவனம் தயாரித்து இசையமைத்து இயக்கி இருக்கிறார்
பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் காதல் காட்சிகளில் இவர் ஒட்டாமல் நடித்திருப்பார் ஆனால் இந்த படத்தில் நாயகியை ஒட்டிக் கொண்டே நடித்து இருக்கிறார் அதற்குப் பிரதிபலனாக
படப்பிடிப்பில் பெரிய விபத்தில் சிக்கிக் கொண்ட விஜய் ஆண்டனியை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி இருக்கிறார் இது உண்மை செய்தி படத்தில் அல்ல
பிச்சைக்காரன் மூளையை பணக்காரன் உடம்பில் பொருத்தினாலும் அது பிச்சைக்கார தான் மூளை தான் என்பதை நிரூபிக்க விதமாக பணத்திற்கு ஆசைப்படாமல் பிச்சைக்காரனாகவே இருக்க ஆசைப்படும் அவர் பிச்சைக்காரர்களுக்காக மற்றும் ஏழைகளுக்காக அவர் கொண்டு வரும் ஆன்டிபிக்லி திட்டம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பது அவருக்கே தெரியும்
மறைந்த எம்ஜிஆர் செய்ய வேண்டிய கதாபாத்திரத்தை விஜய் ஆண்டனி தன்னுள் பொருத்திக் கொண்டிருக்கிறார்
அதுமட்டுமல்லாமல் திரைக்கதையில் பல வெற்றி பெற்ற இயக்குனர்கள் பார்முலாவையும் இணைத்து இருக்கிறார் அந்த இயக்குனர்கள் யார் என்று படம் பார்க்கும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்
கிளை கதையாக அண்ணன் தங்கை பாசம் வழக்கம் போல் தாய் தந்தையர் இறந்துவிட சொந்தங்களின் கொடுமை தாங்காமல் அண்ணனும் தங்கையும் வீட்டை விட்டு விட்டு வெளியேற தங்கையை காப்பாற்ற பிச்சை எடுக்கும் அண்ணன் தீயவர்களின் சிக்கி தங்கையை தொலைக்கும் அண்ணன்
சிறுவர் சீர்திருத்த ஜெயில் சில வருடங்கள் தண்டனை
தண்டனை முடிந்து வந்து தீயவர்களை கொலை செய்து மீண்டும் தண்டனை
இப்படி ஏகப்பட்ட கிளைக் கதைகள் ஆனாலும் படத்தை பிரம்மாண்டமாக இயக்கி இருக்கிறார் ஒரு லட்சம் கோடி சொந்தக்காரனுக்கான
வீடு எப்படி இருக்கும்
ஆபீஸ்
கான்பரன்ஸ் ஹால எப்படி இருக்கும்
அவர் கார் எப்படி இருக்கும்
என்பதை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்
முதல்வராக ராதாரவி அவர் பாணியில் அவர் பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்
ஒரு பணக்காரனிடம் உடன் இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு உதாரணம் ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் அவரின் உருவம் முகபாவம் உடை ஹேர் ஸ்டைல் மற்றும் அவர் பேசும் வசனத்தின் ஏற்ற இறக்கம் ஒரு பெரிய மனிதனுக்கு உள்ள மேனரிசம் அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார் மாநாடுக்குப் பிறகு இந்த படம் அவருக்கு இன்னும் பல படங்கள் வர வாய்ப்பு இருக்கிறது
படத்தின் நாயகி காவியா வெறும் கவர்ச்சிக்காக தான் என்று நம் என்னும் நேரத்தில் படத்தின் இறுதிக் காட்சியில் அவரின் பங்களிப்பு சிறப்பு
யோகி பாபு அங்கங்கே சிரிப்பு வரவழைக்க முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார்
படத்தின் ஒளிப்பதிவு ஓம் நாராயணன் படத்தின் பணக்காரத்தனத்தை தன் கேமரா மூலம் அழகாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்
இசை எடிட்டிங் இயக்கம் விஜய் ஆண்டனி
பிச்சைக்காரன் 2 __ ஏமாற்றம்