ஹிப்ஹாப் ஆதி ஆதிரா முனிஷ்காந்த் மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் வீரன்
கதைக்களம் சிறுவயதில் மின்னல் தாக்கி மருத்துவம் பார்க்க சிங்கப்பூர் செல்கிறார் ஆதி அவர் கனவில் கிராமத்தைப் பற்றிய சில விரும்பத்தக்காத நிகழ்வுகளை காணுகிறார்
சிங்கப்பூரிலிருந்து தன் சொந்த கிராமத்திற்கு வரும் ஆதி அங்கு பவர் பிளான்ட் அவர் ஊரில் வழியாக செல்ல இருப்பதை அறிந்து மக்களிடம் இது ஆபத்தானது என்று கூற பணம் வாங்கிய மக்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்க என்ன செய்வது என்று அறியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஆதிக்கு
சில அபூர்வ சக்திகள் மின்னல் தாக்கியது மூலம் கிடைத்திருக்கிறது அதன் மூலம் அவர் ஊரின் எல்லைச்சாமி வீரன் பெயரில் சில அமானுஷ்ய வேலைகள் நடத்த மக்களும் பவர் பிளான்ட் அமைக்க நினைக்கும் கார்பெட் நிறுவனமும் பயப்படுகிறது இதனால் வீரன் கோயில் இடிக்கப்படுவது தடுத்து திருத்தப்படுகிறது
இது அமானுஷ்ய சக்தி அல்ல மனித சக்தி தான் என்று கார்ப்பரேட் நிறுவனம் முடிவு செய்து யார் அந்த மனிதன் என்று கண்டுபிடிக்க முயற்சிக்க ஆதியின் விஷயங்கள் வெளிப்படுகிறது இதிலிருந்து ஆதி தப்பித்தாரா பவர் பிளான்ட் திட்டத்தை ஆதி முறியடித்தாரா என்பதே மீதி கதை
ஹிப்ஹாப் ஆதியின் வெற்றிப்பட வரிசையில் இந்த வீரன் படம் இடம் பிடிப்பது உறுதி என்பது நமக்கு தெரிகிறது மாறுபட்ட ஆதியாக இந்த படத்தில் தன் நடிப்பை ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இன்னொரு பக்கம்
ஆக்ரோஷமாக இன்னொரு
பக்கம் நகைச்சுவை நடிகராக
தம் பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கிறார்
இதுவரை இளைஞர்களை தன் பக்கம் இழுத்த ஆதி இந்த படத்தின் மூலம் தாய்மார்களையும் குழந்தைகளையும் தன் பக்கம் வரவைத்து இருக்கிறார்
ஆதிரா பெரிய கண் விழிகள் எதார்த்தமான முகம் நம் அண்டை வீட்டு பெண்ணை பார்ப்பது போல் எளிமையாக சிறப்பாக தன் பங்களிப்பை செய்திருக்கிறார்
வில்லனாக வினை அவர் எதுக்கு ஆராய்ச்சி செய்கிறார் அதனால் எதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் என்பது நமக்கு புரியாத புதிர்
முனீஸ் மற்றும் காளி வெங்கட் நகைச்சுவை கதாபாத்திரங்கள் சில இடங்களில் சிரிப்பு வர வைக்க முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளனர்
அவர்களை விட வயதான பாட்டி உறவு முறையை சொல்லி கல்யாண பெண்ணுக்கு மாப்பிள்ளை சித்தப்பா முறை வருகிறது என்று கூறும் காட்சி தியேட்டர் அதிர்கிறது
மரகத நாணயத்திற்கு பிறகு இயக்குனருக்கு இது அடுத்த படம் புதிய முயற்சி வெற்றி நிச்சயம்
வீரன்– இவன் குழந்தைகளின் கதாநாயகன்