சித்தார்த் மற்றும் திவ்யன்ஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு அபிமன்யு சிங், விக்னேஷ்காந்த் மற்றும் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரித்துள்ள ‘டக்கர்’ படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இன்று (ஜூலை 9, 2023)வெளியாகி உள்ளது
கதைக்களம் . தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரியும் நாயகன் ஒரு விபத்தில் கார் படுமோசமாக சேதம் அடைய நிறுவனத்தின் முதலாளி நாயகனை காரின் இழப்பீட்டுத் தொகையாக ஏழு வருடம் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று எழுதி வாங்கிக் கொள்கிறார் விரக்தியில் நாயகன் தற்கொலை முயற்சியில் இறங்க அது தோல்வி அடைகிறது
சாகவேண்டும் என்று முடிவெடுத்த நாயகன் ஒரு கடத்தல் கும்பல் இடம் சென்று வம்பு இழுத்து அடிவாங்கி சாக வேண்டும் என்று முயற்சி செய்து இறங்க திடீரென்று வீரம் வந்து அவர்கள் அனைவரையும் தாக்கி விட்டு அங்கு இருக்கும் காரை கொண்டு செல்கிறார்
இது ஒரு புறம் இருக்க மிகப்பெரிய தொழிலதிபரான மகளாகிய நாயகி திவ்யன்ஷா இன்னொரு தொழிலதிபருக்கு மணமுடித்து தன் தொழிலை விரிவாக்க செய்யும் தந்தையின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாயகியை ஒரு கடத்தல் கும்பல் கடத்தி சென்று ஒரு காரில் அடைத்து வைக்க அந்த காரை தான் நாயகன் திருடி செல்கிறார் பிறகு நடந்தது என்ன என்பதே மீதி கதை
பாய்ஸ் படத்திற்கு பிறகு சித்தாத்திற்கு காதலை காதலிக்கும் கதாபாத்திரம் மிகப்பெரிய பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் ஒருபுறம் இருந்தாலும் ஒரு டிரைவராக தன் இயலாமையை எதிர்நோக்கும் அதே நேரத்தில் விபத்தில் சேதம் அடைந்த காருக்காக அவர் அடி வாங்குவதும் தான் சாக நினைத்து கடத்தல் கும்பல் இடம் அவர் அடி வாங்கும் போதும் கோபத்தில் திருப்பி அடிக்கும் போதும் காதல் நாயகன் ஆக்சன் நாயகனாக மாறுகிறார்
நாயகி திவ்யன்ஷா முற்போக்கு சிந்தனை உள்ள முதல் தரமான பணக்கார இடத்தில் இருந்து கொண்டு புகைப்பது மது அருந்துவது போதை என அனைத்து கெட்ட பழக்கங்களும் உள்ள அக்மார்க் பணக்காரி காதல் ஆரம்பப் புள்ளி என்றால் அதன் முற்றுப்புள்ளி காமம் தான் என்று காதலுக்கு புதிய இலக்கணம் சொல்கிறாள்
அதற்கான முயற்சியில் படுக்கையை சித்தார்த்துடன் பகிர்ந்து கொள்கிறார் அவரின் கவர்ச்சியான முகம் இளமை ததும்பும் உடல்வாகு தமிழ் திரை உலகை ஒரு கலக்கு கலக்கப்போவதில் ஆச்சரியமில்லை
அபிமன்யூ சிங் கடத்தல் கூட்டத்தின் தலைவன் அவரிடம் மூன்று மாதம் பயிற்சி பெற வந்த யோகி பாபு இருவரின் நகைச்சுவை காட்சிகள் படத்தின் ஓட்டத்தை தடையில்லாமல் நகைச்சுவையாக எடுத்து செல்கிறது
நண்பனாக விக்னேஷ் காந்த் ஒரு சில காட்சிகள் என்றாலும் மனதில் நிற்கும் படி செய்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் காதல் காமெடி ஆக்சன் மூன்றும் கலந்த கலவையாக நமக்கு ரசிக்கும் படி தந்திருக்கிறார்
டக்கர் — டாப் டக்கர்