spot_img
HomeNewsஎறும்பு விமர்சனம்

எறும்பு விமர்சனம்

சார்லி எம் எஸ் பாஸ்கர் ஜார்ஜ் சூசன் மோனிகா சிவா மாஸ்டர் சக்தி ரித்விக் உடன் மற்றும் பலர் நடிக்க வந்திருக்கும் படம் எறும்பு

கதைக்களம் விவசாய கூலி செய்யும் சார்லிக்கு முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் இரண்டாம் மனைவி சூசனுக்கு ஒரு குழந்தை கரும்பு வெட்டி கூலி வேலை செய்யும் சார்லிக்கு எம் எஸ் பாஸ்கரிடம் வாங்கிய கடன் கழுத்தை நெரிக்க அதை அடைக்க கரும்பு வெட்டும் வேலைக்கு மனைவியுடன் செல்கிறார்

இது ஒரு புறம் இருக்க மாஸ்டருக்கு சக்தி ரித்விக்கு கையில் மோதிரம் போட வேண்டும் என்று ஆசை தம்பியின் ஆசையை நிறைவேற்ற அக்கா மோனிகா வீட்டில் குழந்தைக்கு வைத்திருக்கும் சிறு தங்க மோதிரத்தை தம்பிக்கு அணிவிக்க மகிழ்ச்சியில் இருந்த தம்பி மோதிரத்தை தொலைத்து விடுகிறான் தாய் தந்தை வருவதற்குள் மோதிரத்தை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தம்பிக்காக அக்காவும் தம்பியும் கிடைத்த வேலை செய்து கொண்டு பணத்தை சேர்க்க

கரும்பு வெட்ட சென்ற சார்லி கடன் அடைக்க முழு பணம் கிடைக்காததால் சொந்த பந்தம் நட்பு வட்டாரம் என பலரிடம் கைமாத்து வாங்கி பற்றாக்குறைக்கு மோதிரத்தை அடகு வைக்கலாம் என்ற முடிவுக்கு வர மோதிரம் வாங்க பணம் சேர்க்க முடியாமல் தவிக்கும் அக்கா தம்பி என்ன செய்வது என்று புரியாமல் திகைக்க ஒரு அதிசய நிகழ்வு நடக்கிறது அது என்ன காணுங்கள் வெள்ளித்திரையில்

ஏழை விவசாயியாக சார்லி வாங்கிய கடனை அடைக்க அவர் படும் பாடு கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினார் இலங்கை வேந்தன் என்ற வார்த்தைக்கு உதாரணமாக திகழ்கிறார் சார்லி

சூசன் சார்லியின் இரண்டாம் மனைவி முதல் தாரத்து பிள்ளைகள் மீது இருக்கும் கோபம் போல் இவருக்கு இருந்தாலும் தானும் தாய்தான் என்ற பந்தத்தில் சிக்கி கணவன் கடனை அடைக்க உதவி செய்வது என ஒரு மனைவிக்குரிய பங்களிப்பை தன் நடிப்பின் மூலம் ஒரு கிராமத்து வாசியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்

ஜார்ஜ் படத்திற்கு காமெடியன் இவர்தான் மனநலம் பாதித்த கதாபாத்திரம் சில இடங்களில் நம் மனதில் நிற்கிறார்

எம் எஸ் பாஸ்கர் வட்டிக்கு பணம் கொடுக்கும் கதாபாத்திரம் சிறந்த நடிகர் ஏனோ இந்தப் படத்தில் அவருக்கு நடிக்க காட்சிகள் சரியாக அமையவில்லை

மோனிகா சிவா சிறுவன் சக்தி ரித்விக்கின் சகோதரி கதாபாத்திரம் தன் நடிப்பை மிகைப்படுத்தாமல் வழங்கி இருக்கிறார் தம்பி தொலைத்த மோதிரத்தை விலைக்கு வாங்க அவர் உழைக்கும் உழைப்பு பாசத்தின் வெளிப்பாடு

கதையின் நாயகன் என்றால் அது சிறுவன் சக்தி ரித்திக் தான் விளையாட்டுத்தனம் சந்தோஷம் பயம் இயலாமை என பல பரிமாணங்களை அந்த சிறிய முகத்தில் பார்க்கும்போது எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய நடிகனாக வருவார் என்பது நமக்கு ஐயமில்லை

சுறுசுறுப்புக்கு எறும்பு உதாரணமாக கூறுவார்கள் அந்த சுறுசுறுப்பு திரைக்கதையில் இல்லை ஆமை வேகத்தில் நகர்கிறது திரைக்கதை

எடுத்துக்கொண்ட கதைக்களம் சிறப்பு என்றாலும் அதை நகர்த்தும் விதத்தில் நமக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்

திரைக்கதை— நிஜத்தின் வெளிப்பாடு பல குறைகளுடன்

Must Read

spot_img