spot_img
HomeNewsநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி லில்லி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன்...

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி லில்லி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் அதிரடி பேச்சு.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி லில்லி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் அதிரடி பேச்சு.

லில்லி” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா.

கோபுரம் ஸ்டூடியோஸ் K. பாபு ரெட்டி, G.சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ” லில்லி “. இயக்குநர் சிவம் இப்படத்தை இயக்கியுள்ளார் குழந்தைகள் உலகை மையப்படுத்தி, மனதை வருடும் அழகிய டிராமாவாக உருவாகியுள்ளது இப்படம் என்ற இப்படத்தைத் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்ன ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக வெளியிடவுள்ளனர் .

விரைவில் திரைக்கு வரவுள்ள “லில்லி” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

இசைத்தட்டினை சிறப்பு விருந்தினர்கள் வெளியிடப் படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் தயாரிப்பாளர் சந்தோஷ்குமார் பேசியதாவது..

எங்கள் திரைப்படத்தின் இசை விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி. கோபுரம் ஸ்டுடியோஸ் தமிழ் தெலுங்கில் இயங்கி வருகிறோம். லில்லி திரைப்படம் தமிழ் தெலுங்கு இரண்டிலும் வருகிறது. இங்குக் குழந்தைகளுக்கான படம் வருவது குறைவு. சிவா இந்தக்கதையைச் சொன்ன போதே எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நல்ல படைப்பாக இப்படத்தை எடுத்துள்ளோம். நாங்கள் தமிழில் ரங்கோலி எனும் படத்தையும் எடுத்து வருகிறோம். தொடர்ந்து நல்ல படங்களைத் தருவதே எங்கள் நோக்கம். நல்ல படைப்பிற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

நடிகர் உதயா பேசியதாவது…

நான் மாநாடு ஷூட்டிங்கில் இருந்த போது இந்தக்கதையை என்னிடம் சொன்னார்கள். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அஞ்சலி படத்திற்குப் பிறகு இந்தப்படம் குழந்தைகளுக்கான படமாக இருக்கும். இந்நிறுவனத்தின் அடுத்த படத்தில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அம்ரீஷ் நடிக்கிறார். இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெறும். இப்போது கதை நன்றாக இருந்தால் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுகிறது. போர்த்தொழில், 2018 போன்ற படங்கள் கதையால் ஜெயித்துள்ளன. எந்தக்காலத்திலும் கதை உள்ள படங்கள் ஜெயிக்கும். நல்ல படங்களுக்கு நீங்கள் தரும் ஆதரவை இந்தப்படத்திற்கும் தாருங்கள் நன்றி என்றார்.

இயக்குநர் பிரவீன் காந்த் பேசியதாவது..

நிறையப் படங்கள் சின்னப்பிள்ளைத்தனமாக எடுக்கிறார்கள் ஆனால் இவர்கள் சின்னப்பிள்ளைகளை வைத்து அருமையான படமெடுத்துள்ளார்கள். இங்கு எல்லோரும் தயாரிப்பாளரிடம் ஆசி வாங்கினார்கள் அதைப்பார்க்க மிக சந்தோசமாக இருந்தது. ஒரு படத்துக்கு டைட்டில் ரொம்ப முக்கியம் லில்லி பெயர் கேட்கவே இதமாக இருக்கிறது. தயாரிப்பாளரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் அன்புக்கலாச்சாரம் திரும்ப வரவேண்டும் இப்படம் மூலம் அது வர வேண்டும். குழுவாக இப்படத்தினர் அருமையான படைப்பைத் தந்துள்ளார்கள் அனைவருக்கும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

இயக்குநர் பேரரசு பேசியதாவது..

தயாரிப்பாளரை முதலாளியாக்க நினைப்பது அபூர்வமாகிவிட்டது. தமிழில் தயாரிப்பாளர்கள் காலை வாரிவிடுவது நடக்கிறது. அது மாற வேண்டும். தமிழில் முன்பெல்லாம் அஞ்சலி, அன்புள்ள ரஜினிகாந்த், குழந்தைகளுக்கான படம் வரும் இப்போது அப்படி படம் வருவதில்லை. சின்ன படத்தை நல்ல படமாக இருந்தால் பத்திரிக்கை நண்பர்கள் கொண்டாடுகிறார்கள் ஆனால் படம் ஓடவில்லை என சொல்லும்போது தவறு எங்குள்ளது என்பதை நாம் தான் ஆராய வேண்டும். டாஸ்மாக்கில் கூட அதிகமாக 10 ரூபாய் கேட்கிறார்கள் எனப் பெரிய பிரச்சனை ஆக்கிவிட்டார்கள் ஆனால் தியேட்டர் கேண்டீனில் 20 ரூபாய் டீயை 100 ரூபாய் விற்கிறார்கள் இதை யார் கேட்பது. இப்படி இருந்தால் எப்படி திரையரங்கு வருவார்கள். இதை நாம் பேச வேண்டும். தயாரிப்பாளர் ராஜன் சார் ஹீரோக்களை பற்றிப் பேசுவார் ஆனால் இன்று விஜய் சார் மிக நல்ல காரியம் செய்தார். மாணவர்களுக்குப் பரிசு வழங்கியதோடல்லாமல் நல்ல அறிவுரையைச் சொன்னார். மக்களுக்குப் பிடித்த நடிகர் சொல்லும் போது அது எல்லோருக்கும் போய்ச்சேரும். ஓட்டுக்குப் பணம் வாங்காதே என நல்ல விசயத்தைச் சொல்லியுள்ளார் விஜய் சார் அவருக்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். லில்லி படம் டிரெய்லரே நன்றாக உள்ளது. எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பாபு ரெட்டி சந்தோஷ்குமார் நிறையப் படமெடுக்க வேண்டும் நன்றி.

தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது..

தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது..

நிறையத் திரை விழாக்களில் கலந்துகொள்கிறோம் எல்லாவற்றிலும் அருவா துப்பாக்கி சத்தம் தான் அதைப்பார்த்து வெறுப்பாகிவிட்டது. அதிலிருந்து நம்மை மீட்டு வருவதாக மனதை வருடும் படைப்பாக லில்லி அமைந்துள்ளது. ஒரு அழகான குழந்தைகள் படம். நம் குழந்தைகளிடம் செல்ஃபோன் வாங்கி கொடுத்துக் கெடுத்து விடுகிறோம். அதை மாற்ற வேண்டும். தியேட்டரில் பாப்கார்ன் விலை அதிகம் என்றார்கள் ஆனால் 100 ரூபாய் டிக்கெட்டை, 300 ரூபாய்க்கு விற்கிறானே அதையும் கேட்க வேண்டும். நான் ஹீரோக்களை பற்றி வேண்டுமென்றே பேசுவதில்லை. நடிகர் விஜய் புரமோஷனுக்காக தான் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார், விளம்பரத்திற்காகத் தான் எல்லாம் செய்கிறார் என நினைத்தேன் ஆனால் இன்று பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கி அந்த எண்ணத்தை மாற்றிவிட்டார். விஜய் உண்மையிலேயே நல்லது செய்துள்ளார். விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் அது உறுதியாகிவிட்டது. லில்லி படம் டிரெய்லர் பார்க்கவே அருமையாக உள்ளது. பாடல்கள் பிரமாதமாக இருக்கிறது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். தமிழில் நல்ல படங்களைத் தர, இந்த தயாரிப்பாளர்கள் பெரிய வெற்றி பெற வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு என் வாழ்த்துக்கள். நன்றி

தயாரிப்பாளர் AL அழகப்பன் பேசியதாவது…

இந்தப்படத்தைப் பொறுத்தவரை நான் நன்றி சொல்லவே வந்துள்ளேன். தயாரிப்பாளர் என் குடும்பம் போல், அவர்களது அடுத்த படத்தில் என் பேரன் நடித்திருக்கிறார். இது என் குடும்ப விழா. தயாரிப்பாளராக 30 படங்கள் செய்துள்ளேன். இப்போது திரைத்துறையில் பிரச்சனை இருக்கிறது என்கிறார்கள் நாங்கள் தயாரிப்பாளராக இருந்த காலகட்டத்தில் இவ்வளவு பிரச்சனை இருந்ததில்லை. இப்போதைய பிரச்சனையில் படம் செய்யத் தயாரிப்பாளர்களே வருவதில்லை. அதனால் நல்ல படங்களுக்கு சின்னப்படங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தர வேண்டும். என் பிள்ளைகள் சினிமாவிற்கு வரவேண்டுமென நான் நினைக்கவில்லை ஆனால் அவர்கள் வந்துவிட்டார்கள். என் பேரன் அம்ரீஷ் இப்போது ரங்கோலி மூலம் நாயகனாகியிருக்கிறார். பேபி நேஹாவையும் சிறு வயது முதலே எனக்குத் தெரியும் லில்லி படத்தில் அருமையாக நடித்துள்ளார். இவர்கள் பெரிய நடிகர்களாக வர வேண்டும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் சிவம் பேசியதாவது..

எங்களுடைய திரைப்பட விழாவிற்கு வந்து வாழ்த்திய அனைவருக்கு நன்றி. நான் தெலுங்கு தான். லில்லி படம் எழுத காரணம் சினேகா பாபு, பல காலம் இந்தக்கதையை வைத்து தயாரிப்பாளர் தேடினேன் ஆனால் கிடைக்கவில்லை இறுதியாக பாபு ரெட்டி அவர்கள் இப்படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்டார்கள். பேபி நேஹா பாப்பா நிறையக் கூச்ச சுபாவம் கொண்டவர், அவரை வைத்து முழுப்படமும் எடுப்பது கடும் சவாலாக இருந்தது. இந்தப்படம் குழந்தைகளுக்கான படம் இல்லை பெரியவர்களுக்கான படம். அனைவரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும். பேபி நேஹாவைப்பார்த்த பிறகு என் வாழ்வில் எல்லாமே சந்தோஷமான மாற்றம் தான். இந்தப்படம் உங்கள் மனதை இலகுவாக்கும் அனைவரும் இத்திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தர வேண்டும் நன்றி என்றார்.

Must Read

spot_img