spot_img
HomeNewsஅஸ்வின்ஸ் விமர்சனம்

அஸ்வின்ஸ் விமர்சனம்

வசந்த் ரவி விமலா ரமணன் மற்றும் பலர் நடிக்க வெளிவர இருக்கும் படம் அஸ்வின்ஸ்

இயக்கம் தருண் தேஜா கதைக்களம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு குடியானவனின் இரண்டு மகன்கள் இறந்து விட அதில் ஒருவனை உயிர்பித்து தரும் கடவுள் அந்தப் பிள்ளைக்கு இரண்டு சக்தி வாய்ந்த குதிரை பொம்மைகள் தர இந்த பொம்மை இருக்கும் வரை அவனுக்கு இயற்கை மரணத்தைத் தவிர வேறு எந்த மரணமும் நெருங்காது என்று கூற அந்த குதிரையில் ஒன்றை அபகரிக்க நினைக்கும் தீய சக்தி சகோதரனை தான் அழைத்து வருவதாக சொல்லி அந்த குதிரை பொம்மையில் ஒன்றை அபகரித்து கெட்ட ஆவி ஒன்றை சகோதரனாக உருமாற்றி அந்த தீய சக்தி அவனிடம் ஒப்படைக்கிறது

காலங்களின் ஓட்டத்தில் பிரிந்த இரண்டு சிலையும் ஒன்றாக இணைத்து கட்டப்பட்டு புதைக்கப்படுகிறது இதனால் தீய சக்தி தன் செயல்பாடுகளை செயல்படாமல் தடுக்கிறது லண்டனில் இருந்து வரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் விமலா ரமணன் அந்த குதிரை சிலையை கண்டுபிடித்து பிரிக்க தீய சக்தி விஸ்வரூபம் எடுக்கிறது

இந்த கதை நமக்கு எப்படி தெரிகிறது என்றால்

ஐந்து பேர் சேர்ந்து ஆவி சம்பந்தமாக youtube நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அதை பார்த்த லண்டன் நிறுவனம் லண்டனில் தனியாக இருக்கும் ஒரு மேன்ஷனில் பல கொலைகள் நடந்து அதில் ஒரு பெண் பிணம் காணாமல் போக அதைப்பற்றி ஒரு டாக்குமென்டரி எடுத்து தர சொல்லி இந்த ஐந்து பேரை அணுக அந்த ஐந்து பேரும் லண்டனில் அந்த மேன்ஷனுக்கு செல்ல ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் கொல்லப்படுகிறார்கள்

அந்த ஒருவருக்கு அந்த வீட்டில் ஒரு லேப்டாப்பில் மேல் சொன்ன கதைகள் தெரிய வருகிறது நண்பர்கள் நாலு பேர பறி கொடுத்த நாயகன் அவர்களை உயிர்ப்பிக்க இரண்டு சிலையும் சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து தன் உயிரை மாய்த்து மற்றொரு உலகத்திற்கு சென்று சிலையை கண்டுபிடித்து சேர்த்தாரா என்பது மீதி கதை

படிக்கும் போதே குழப்பமாய் இருக்கிறதா படம் பார்க்கும்போது அப்படித்தான் நமக்கும் இருக்கிறது இயக்குனர் எதை சொல்ல வருகிறார் என்பது தெளிவாக சொல்ல வில்லையா இல்லை நமக்கு அது புரியவில்லையா என்பது தெரியவில்லை இவர் அமானுஷ்யங்களையும் ஆவிகளையும் இணைத்து திரைக்கதை அமைத்திருக்கிறாரா அல்லது தீய சக்தியும் நல்ல சக்தியும் மோத விட்டுப் பார்க்கிறாரா என்பது திரைக்கதையின் பிரதிபலிப்பு தெளிவில்லாமல்
ஒளியும் ஒலியும் வைத்து நம்மை பயமுறுத்தி பார்க்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறாரா என்பது பார்ப்பவர்களுக்கு வெளிச்சம்
படத்தின் நாயகன் யார் என்றால் அது வசந்த் ரவி என்றாலும் உண்மையான நாயகன் சவுண்டு தான் அதை அடிக்கடி வெளிப்படுத்தி பயமுறுத்த முயற்சிக்கிறார் இயக்குனர்

கதாநாயகி கேமரா அது போற போக்கில் நம்மையும் அழைத்துச் செல்கிறது இருட்டு டார்ச் வெளிச்சம் கத்தல் இதுதான் படம் முழுக்க இயக்குனர் அமெரிக்காவில் சவுண்ட் சம்பந்தமான படிப்பில் பட்டம் பெற்றவராம் அதை இந்த படத்தின் மூலம் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது

இந்த படம் ஆங்கிலத்தில் வந்திருந்தால் நம் பிரமித்து பார்த்து கைதட்டி இருப்போம் காரணம் ஆங்கிலம் நமக்கு தெரியாததால்
இது தமிழ் படம் என்பதால் பிரமிக்க முடியவில்லை கை தட்டவும் முடியவில்லை ஒன்றும் புரியவில்லை புதுமை என்று நினைத்து பழமையை தூசி தட்டி நமக்கு சொல்ல

பழமையின் பல பக்கங்கள் தூசி தட்டும் போது காணாமல் போய்விடுகிறது

அஸ்வின்– கதையை நம்பாமல் டெக்னிகளி நம்பி ஏமாந்த கதை

Must Read

spot_img