spot_img
HomeNewsபானிபூரி விமர்சனம்

பானிபூரி விமர்சனம்

லிங்கா சாம்பிக்கா குமரவேல் கனிகா மற்றும் பலர் நடிக்க ஷார்ட் ஃபிலிக்ஸ் ஓ டி டி தளத்தில் வெளிவந்திருக்கும் வெப் சீரிஸ் பானி பூரி பானி பூரி என்றால் சாப்பிடும் பொருள் என்று நினைக்க வேண்டாம் நாயகனின் முழு பெயரின் சுருக்கம் பாணி நாயகி முழு பெயர் சுருக்கம் பூரி இரண்டும் இணைந்து பானிபூரி மன்னிக்கவும் இணைவதற்கு பயணிக்கும் பயணம் தான் பானிபூரி

நாயகன் நாயகியை நான்கு வருடமாக காதலிக்க நாயகனின் தோழி 11 வருடம் காதலித்து மணமுடித்து விவாகரத்து கோர இதனால் மனம் குழம்பிய நாயகி தன் காதலை ரத்து செய்ய நாயகன் நாயகியின் தந்தையிடம் நியாயம் கேட்க இருவரும் ஒரு வாரம் லிவிங் டு கெதர் லிருந்து பிறகு திருமணத்தை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல ஒரு தனி அப்பார்ட்மெண்டில் நாயகனும் நாயகியும் ஒரு வார பயணத்தை தொடங்க இறுதியில் இணைந்தார்களா?
வாழ்க்கை வளமானதா?
என்பதை சொல்வதே பானிபூரியின் மீதி கதை

இயக்கம் பாலாஜி வேணுகோபால் லிவிங் டுகெதர் என்றாலே நம் மனம் படுக்கை அறைக்கே செல்லும் அதைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்றே நம் மனம் கூறும் ஆனால் அது இல்லாமல் மனங்களை இளைப்பாற விட்டு
எண்ணங்களை அசை போட்டு
ஆசைக்கு அணை போட்டு
அழகாக ஒரு வாழ்க்கை பயணத்தை வசந்தமாக திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்
காதலிக்கும் போது காதலித்த பிறகு அவர் அவர் வீட்டுக்கு சென்று விடுகிறோம் திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒரே வீட்டில் வசிக்கும் போது பிரச்சனைகள் ஏற்படுகிறது காரணம் காதல் என்பது ஒரு சுவாரசியமான பயணம் வாழ்க்கை என்பது அமைதியான ஆலமரம் பயணம் இனிக்கும் ஆலமரத்தின் வசிப்பு சில காலங்களில் கசக்கும்
ஆனால் அதுதான் நிரந்தரம் என்பதை ஏற்றுக் கொள்ள நம் மனம் அலைபாயும் அந்த அலைபாயும் மனங்களுக்கு சிறந்த மருந்தாக இந்த பானிபூரி வெப் சீரிஸ் நிச்சயம் இருக்கும்

கதையின் நாயகன் லிங்கா பல பரிமாணங்களில் இவரை பல படங்களில் பார்த்திருக்கிறோம் ஆனால் காதல் நாயகனாக அவரைப் பார்ப்பது இந்த பானிபூரி வெப் சீரிஸில் தான் மாறுபட்ட கதாபாத்திரம் மாறுபட்ட நடிப்பு யதார்த்த நாயகனாக காதலிக்கும் ஆண்கள் அனைவருக்கும் ஒரு உதாரண காதலனாக உலா வந்திருக்கிறார்
நாயகி சாம்பிக்கா கட்டு மஸ்தான உடல்வாகு இவரை நாயகியாக ஏற்க நம் மனது மறுத்தாலும் இயக்குனர் திரைக்கதை வசனத்தால் நம்மை ஏற்க வைத்துக் கொண்டுள்ளார்
இவர் ஒரு சயின்டிஸ்ட் கதாபாத்திரம் இவர் காதலை ரத்து செய்வதற்கு காரணம் தோழியின் விவாகரத்து என்று நாம் நினைத்தால் சாதிக்காத தன் தந்தையை தன் தாய் விட்டு சென்றதால் தான் சாதித்தே பிறகு தான் திருமணம் அது எப்போது என்று தெரியாததால் காதலை ரத்து செய்து காதலனை வாழ வைக்க முயல்கிறார் சாதனைக்கு திருமணம் ஒரு முட்டுக்கட்டை என்பது போல் இவர் எண்ணம்

தந்தையாக குமாரவேல் வழக்கமான தந்தைக்கு மேல் ஒரு யதார்த்தமான வாழ்வியலை படித்த தந்தை இவரின் அணுகுமுறை அனைத்து பெண்களுக்கும் இது மாதிரி ஒரு தந்தை நமக்கு கிடைக்காதா என்று ஏங்க வைக்கிறார் நடிப்பில் நம்மை மெய்மறக்கச் செய்கிறார் தமிழ் சினிமா ஏன் இவரை இன்னும் இந் நிலையிலேயே வைத்திருக்கிறது அடுத்த நிலைக்கு ஏன் எடுத்துச் செல்லவில்லை என்பது இன்னும் புரியாத புதிராக இருக்கிறது

கனிகா அவர் கணவனாக நடித்தவர் நாயகனின் நண்பன் அப்பார்ட்மெண்ட் செகரட்டடியாக வருபவர் அனைவரும் தங்கள் கதாபாத்திரமறிந்து தங்கள் பங்களிப்பை தரமாக தந்துள்ளனர் எந்த ஒரு கதாபாத்திரமும் தேவையில்லை என்று நாம் நாம் நினைக்காத அளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு முக்கியத்துவம் அவர்கள் ஸ்கோர் செய்ய ஒரு காட்சி என அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்
பல இடங்களில் வசனங்களில் அவர் கூறும் விஷயம் வாழ்வியலை படித்தவருக்கும் படிக்க இருப்பவருக்கும் தேவையான ஒன்று
படம் முழுக்க நகைச்சுவையை ஒரு மெல்லிய கோடாக இணைத்து சிரிப்பை சிக்கனமாக இணைத்து இருக்கிறார்

இந்த வெப் சீரிஸ்க்கு இசை சுந்தர் இவர் இதில் இசை அமைக்க எந்த ஒரு இசைக் கருவியும் பயன்படுத்தாமல் தன்னிடம் இருக்கும் ஐ பேட் அதில் ப்ரோக்ராம் செய்து இசைத்திருக்கிறார் இது ஒரு புது முயற்சி
இந்த முயற்சி தொடர்ந்தால்
ஞானிகள் போனியாகாமல் போய்விடும்
புயல்கள் கரையை கடந்து விடும்
வாழ்த்துக்கள் புது முயற்சிக்கு

பானி பூரி— நிஜத்தின் நிழல்

Must Read

spot_img