ஆதர்ஷ் காதம்பரி மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் நாய்யாடி கதைக்களம் மாந்திரீகம் பில்லி சூனியம் ஏவல் கூடு விட்டு கூடு பாய்வது என பல அம்சங்களைக் கொண்டு வெளி வந்திருக்கிறது நாயாடி
நாயாடி என்பது ஒரு பழங்குடி சமூகத்தின் ஒரு இனம் இந்த இனம் ஒரு அடிமை வர்க்கம் மேல் வர்க்கத்தின் கொத்தடிமைகளாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த இனம்
தன்னையும் தன் இனத்தையும் காப்பாற்றிக் கொள்ள மாந்திரீகம் பில்லி சூனியம் ஏவல் போன்ற தீய சக்திகளை கற்றுக்கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர் இவர்களை அடிமைப்படுத்தி இருந்த மேல் வர்க்கம் இவர்களைப் பார்த்து பயம் கொள்ள ஆரம்பிக்கின்றனர்
இந்த இனத்தின் ஒரு பெண் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னரை வசியப்படுத்தி திருமணம் செய்து கொள்ள ஊர் மக்கள் அனைவரும் அவர்களை வீட்டோடு எரித்து விடுகின்றனர் ஆனால் அந்த இருவரும் தப்பித்து விடுகின்றனர் அது மட்டும் அல்ல ஆயிரம் ஆண்டு காலம் வாழும் வரத்தையும் தீய சக்தியால் பெற்று விடுகின்றனர்
உயிர் ஆயிரம் ஆண்டு காலம் இருக்கும் ஆனால் உடல் ஒத்துழைக்காதே அதனால் ஒவ்வொரு அறுபது ஆண்டுகளிலும் ஒரு இளம் வயது ஆண் பெண் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்து வாழ்ந்து வருகின்றனர் அப்படி கூடு விட்டு கூடு பாய இந்த காலத்தில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் மனிதர்களை எப்படி தங்கள் இடத்திற்கு வர வைத்து கூடு விட்டு கூடு பாய்கிறார்கள் என்பதே இப்படத்தின் முழு கதை
மீதி கதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
படத்தின் 75 சதவீத காட்சிகள் காட்டுக்குள்ளே நடக்கிறது பார்த்த இடத்தையே கேமராவை நகர்த்தி நகர்த்தி நமக்கு காட்டி இருக்கிறார்கள் முதல் பாதி முழுவதும் நடிகர்களை ஓட வைத்து பயமுறுத்தி கொலை செய்வது இதற்கு திரைக்கதை அழகாக அமைத்திருக்க வேண்டும் ஆனால் இயக்குனர் ஆஸ்திரேலியாவில் ரயில் ஓட்டும் பணியில் இருந்த வராம் அதில் சம்பாதித்த பணத்தை வைத்து இந்த படத்திற்கு கதை திரைக்கதை எழுதி தயாரித்து இயக்கி இருக்கிறார்
ஆனால் திரைக்கதை அமைக்கும் போது கொஞ்சம் அனுபவசாலிகள் பக்கத்தில் வைத்துக் கொண்டு திரைக்கதை அமைத்திருந்தால் படம் தொய்வில்லாமல் இருக்கும் படத்தின் கடைசி அரை மணி நேரம் கொஞ்சம் பரபரப்பு விறுவிறுப்பு சஸ்பென்ஸ் என கிளைமாக்ஸ் சிறப்பாக அமைத்திருந்தார் இயக்குனர்
அந்த சிறப்பு முதல் பாதியில் இருந்தால் படம் முதல் தரத்தில் இருக்கும்.
நாயாடி – பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்