spot_img
HomeNewsபான் இந்திய படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் வழக்கமான படப்பிடிப்பு மும்பையில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சியுடன்...

பான் இந்திய படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் வழக்கமான படப்பிடிப்பு மும்பையில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சியுடன் தொடங்கியுள்ளது!

பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் தயாரிப்பில் பூரி கனெக்ட்ஸ் வழங்கும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயகனாக நடிக்கும் பான் இந்திய படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் வழக்கமான படப்பிடிப்பு மும்பையில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சியுடன் தொடங்கியுள்ளது!

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் கிரேஸி புராஜெக்ட்டான ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் நடிகர் ராம் பொதினேனியின் கதாபாத்திர மாற்றம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து பூரி கனெக்ட்ஸில் இப்படத்தை தயாரிக்கின்றனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு மும்பையில் இன்று தொடங்கியது. ’இதரம்மயிலதோ’ படத்தில் இருந்து இயக்குநர் பூரியுடன் இணைந்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் கெச்சாவின் ஆக்‌ஷன் கொரியோகிராஃபியில் பிரம்மாண்டமான செட்டில் ராம் மற்றும் ஃபைட்டர் குழுவுடன் பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சியுடன் படப்பிடிப்பு பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் கியானி கியானெல்லி இந்த ஹை-வோல்டேஜ் ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் பணியாற்றுகிறார்.

படத்தின் வொர்க்கிங் ஸ்டில்லில் நடிகர் ராம் கையில் ஃபயர்வொர்க்ஸை தன் கையில் பிடித்தபடி டிரக்கில் அமர்ந்திருப்பதைக் காணலாம். பூரி, கெச்சா மற்றும் கியானி ஆகியோரும் முகத்தில் புன்னகையுடன் இந்தப் புகைப்படத்தில் காணப்படுகின்றனர். டபுள் ஐஸ்மார்ட் அதிக பட்ஜெட்டில் தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த தரத்துடன் தயாரிக்கப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விவரம் விரைவில் வெளியிடப்படும்.

‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய அளவில் மகா சிவராத்திரியான மார்ச் 8, 2024 அன்று வெளியாக இருக்கிறது.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பூரி ஜெகன்னாத்,
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்னாத், சார்மி கவுர்,
பேனர்: பூரி கனெக்ட்ஸ்,
தலைமை நிர்வாக அதிகாரி: விசு ரெட்டி,
ஒளிப்பதிவாளர் கியானி கியானெல்லி,
ஸ்டண்ட் இயக்குநர்: கெச்சா

Must Read

spot_img