மிகப்பெரிய ஐடி நிறுவனத்தில் மருமகனாக இருக்கும் ஸ்ரீகாந்த்திற்கு வீட்டில் அவ்வப்போது சில அமானுஷ்ய சக்திகளின் பயன்படுத்துவதன் காரணமாக பேய் ஓட்டும் அறிவியல் அறிஞர் ஆஷிஷ் வித்யாதிடம் உதவி கேட்க ஸ்ரீகாந்த வீட்டிற்கு வரும் ஆஷிஷ் வித்யாதி வீட்டில் கெட்ட சக்திகள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு செல்கிறார் அவர் சென்றதும் மீண்டும் துஷ்ட சக்திகள் ஸ்ரீகாந்த் தை பயமுறுத்துகிறது மீண்டும் ஆஷிஷ் வித்யார்த் சென்ற ஸ்ரீகாந்த் தன்னைக் காப்பாற்றும் படி கூட உண்மையை கூறினால் காப்பாற்றுகிறேன் என்று சொல்ல ஸ்ரீகாந்த் தன் முதல் மனைவியை எப்படி பயமுறுத்தி கொலை செய்தார் என்பதைக் கூற
மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. அவரால் ஸ்ரீகாந்தத்தை காப்பாற்ற முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்.
மொத்த படத்தையும் திரில்லிங் என்கிற நூலால் இழுத்து கட்டி நம்மையும் இருக்கை நுனியில் அமர வைத்து விடுகிறார்கள்/
ஐடி நிறுவன ஊழியராக, அம்மாவுக்கு பாசமான பிள்ளையாக, காதலனாக, கணவனாக என தனது கதாபாத்திரத்தில் எந்த அளவுக்கு வெரைட்டி காட்டி நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு ஸ்ரீகாந்த் மிகச்சரியாக தனது வேலையை செய்திருக்கிறார். குறிப்பாக அமானுஷ்ய உணர்வுகளால் பாதிக்கப்படும்போது அவர் நடந்து கொள்ளும் விதம் நம்மையும் பயப்பட வைக்கிறது.
ஜாடிக்கேத்த மூடியாக ஸ்ரீகாந்தன் மனைவியாக கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் அம்சமாக பொருந்தி இருக்கிறார் வித்யா பிரதீப். குறிப்பாக பேய்ப் படங்களுக்கும், பூனைக்கும் கூட அவர் பயப்படுவதுடன் நம்மையும் சேர்த்து மிரட்டுகிறார். இன்னொரு நாயகியாக பூஜா ஜவேரி ஹைடெக் கதாபாத்திரத்தில் நம்மை ஈர்க்கிறார்.
பேய் ஓட்டும் நிபுணராக ஹைடெக் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அசர வைக்கிறார் ஆசிஸ் வித்யார்த்தி. பாசமான அம்மாவாக பிரவீணா, பக்கபலமான நண்பர்களாக ஸ்ரீநாத் மற்றும் கும்கி அஸ்வின், .
பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே நடப்பதால் ஒளிப்பதிவாளர் கோபிநாத் அதில் என்ன வித்தை காட்ட முடியுமோ அத்தனையையும் காட்டியுள்ளார். நரேன் பாலகுமாரின்.
பொதுவாக பேய் படங்களுக்கு என ஒரு வலுவான பிளாஸ்பேக்கும் பேயாக மாறுவதற்கு என ஒரு பின்னணியும் இருக்கும். இந்த படத்தில் அது அப்படியே கொஞ்சம் உல்டாவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தை இயக்கியுள்ள நவீன் கணேஷ் ஒரு அறிமுக இயக்குனர் என்றாலும் படம் பார்க்கும்போது ஏற்கனவே டைரக்ஷனில் கரை கண்டவர் போல வெகு நேர்த்தியாக காட்சிகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார்,
.
எக்கோ –இது ஒரு பேயின் குரல்
Banner: Shri Vishnu Visions
Producer : Dr.Rajasekar
Co-producer: Uma Sasi
Director : Nawin Ghanesh
DOP : Gopinath
Music Director: Naren Balakumar
Editor: Sudharshan
Art: Michael
Dance Choreography: Shanthi, Radhika
Stunt Choreography: Danger Mani
Artists:
Srikanth
Asish Vidyarthi
Vidya Pradeep
Pooja Jhaveri
Kaali Venkat
Srinath
Kumki Ashwin
Delhi Ganesh
Praveena