spot_img
HomeNewsலவ். விமர்சனம்

லவ். விமர்சனம்

பரத், வாணி போஜன் இருவரும் காதலர்கள். பரத் தொழிலில் நஷ்டம் அடைந்த நிலையில் இருந்தாலும் அவரை திருமணம் செய்வதில் விடாப்படியாக இருக்கிறார் வாணி போஜன். அவரது தந்தை ராதாரவிக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் மகளுக்காக சம்மதிக்கிறார். ஆனால் திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள்ளேயே கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஈகோ ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏற்படும் சண்டையில் பரத் தாக்கியதில் வாணி போஜன் உயிரிழக்கிறார். இதை அடுத்து பரத் என்ன செய்தார் ? உண்மையை ஒப்புக்கொண்டு சரணடைந்தாரா ? செய்த கொலையை மறைப்பதற்காக மேலும் தவறுகள் செய்தாரா ? இறுதியில் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை பெரிதாக விடக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த படம் வெளியாகி உள்ளது.
மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கும் கணவனாகவும்,மனைவிக்கு துரோகம் செய்யும் சிக்கல் நிறைந்த வாழ்க்கை வாழும் பரத், தன் மனசாட்சியை கற்பனையாக உருவகம் செய்து தான் செய்யும் காரியத்திற்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கும் குழம்பிய மனநிலையை பயம், கோபம், இயலாமை கலந்து இயல்பாக பதிவு செய்துள்ளார் பரத்.
கணவனின் தொழில் சம்பந்தமாக உறுதுணையாக இருந்தாலும். கணவனின் நம்பிக்கை துரோகத்தை பொறுக்காத மனைவியாக வாணி போஜன் எடுக்கும் முடிவு திருமணத்தில் இக்கட்டான சூழ்நிலையில் தகராறு ஏற்பட எதிர்பாராத விபரீதம் நடக்கும் போது அதை சமாளிக்க முடியாமல் திணறும் மனைவியாக நேர்த்தியாக தன் நடிப்பால் சிறப்பாக செய்துள்ளார்.
பரத்தின் நண்பர்களாக நடித்துள்ள விவேக் பிரசன்னா மற்றும் டேனியல் போப் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ஒரு பக்கம் நகைச்சுவையாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் கொஞ்சம் கடுப்படிக்கவே செய்கின்றனர். அதே சமயம் இவர்களது கதாபாத்திரம் பற்றிய உண்மை தெரிய வரும்போது நிச்சயம் நமக்கு அதிர்ச்சி ஏற்படுவது நிஜம்.
இதுவரை மலையாளம் மற்றும் தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் படங்களுக்கு நேர்த்தியான வசனம் எழுதி வாகை சூடிய ஆர்பி பாலா இந்த படத்தை இயக்கியுள்ளார். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கமர்சியல் படமாக எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிற எண்ணம் ஏற்படாமல் இல்லை.
ஒரே வீட்டிற்குள் நடக்கும் கதை, கணவன் மனைவிக்குள்ளான பிரச்சனைகள் என ஒரே இடத்தில் படம் சுற்றி வருவது போன்ற ஒரு உணர்வும் ஏற்படுகிறது. லவ் என பெயர் வைத்துவிட்டு காதல் காட்சிகளை குறைவாகவே வைத்துள்ளார் இயக்குனர் ஆர்பி பாலா

Must Read

spot_img