spot_img
HomeNewsசான்றிதழ் விமர்சனம்

சான்றிதழ் விமர்சனம்

தூத்துக்குடி ஹரிகுமார் முதன்மை கதா பாத்திரத்தில் நடிக்க வெளிவந்திருக்கும் படம் சான்றிதழ்

இந்திய திருநாட்டிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கருவறை எனும் கிராமத்திற்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது அதை வாங்க மற்றும் கிராம மக்களிடம் அமைச்சர் ராதா ரவி விருதை வாங்க சொல்ல விருது வாங்க வேண்டும் என்றால் எங்கள் கிராமத்திற்கு வந்து கொடுக்க சொல்லுங்கள் வாங்கிக்கொள்கிறோம் என்று கிராம மக்கள் அனைவரும் சொல்ல கோபத்தில் அமைச்சர் சென்று விடுகிறார்

இந்நிலையில் ஒரு பத்திரிக்கை நிருபர் போலி டாக்டர் மீன் விற்பவர் மற்றும் கிராமத்திற்கு ஒதுங்க வரும் நபர் ஒருவர் இந்த நால்வரும் அந்த கிராமத்தில் சிறை வைக்கப்படுகின்றனர் இறுதியில் இவர்கள் கிராமத்தை உளவு பார்க்க வந்த அரசு அதிகாரிகள் என்று தெரிய வருகிறது

தமிழக கவர்னர் அந்த கிராமத்திற்கு வந்து சிறந்த கிராமத்திற்கான விருது வழங்க அதை பெற்றுக் கொள்கின்றனர் கிராம மக்கள் இந்த கிராமம் இப்படி மாற ஒரு ஃபிளாஷ்பேக் கதை சொல்லப்படுகிறது அது என்ன அதுதான் மீதி கதை

மனோபாலா ரவி மரியா கௌசல்யா என பல பிரபலங்களை வைத்து நல்ல கருத்தை சொல்ல படத்தை இயக்கியிருக்கிறார் ஜெயச்சந்திரன் ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஒரு கிராமத்தை அழகுபட காட்டி இருக்கும் இயக்குனருக்கு வாழ்த்து

டாஸ்மாக்கை பாஸ் மார்க் ஆக்கி கட்டிங் மட்டுமே மக்களுக்கு வழங்கி இரவு ஆறு மணிக்கு மேல் டிவி நிகழ்ச்சிகள் பார்க்க அனுமதிக்காமல் இரவு கிராம மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து உணவருந்துவதும் ஊரெங்கும் சி சி கேமரா அமைத்து ஒரு முன்மாதிரி கிராமமாக நமக்கு எடுத்துக்காட்டிய இயக்குனருக்கு வாழ்த்து சொல்லி கைத்தட்டலாம் என்று நினைக்கும் வேளையில்

பிளாஷ்பேக்கில் அவர் கூறும் கதை நம்மை வெறுப்படையை செய்கிறது ஊரில் இருக்கும்
ஆண்கள் அனைவரும் குடிகாரர்கள் போலவும்
வயது வந்த பெண்கள் ஆண்களுடன் ஊர் சுற்றுவது போலவும்

கல்யாணம் ஆன பெண்கள் மற்ற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்வது போலவும்

காட்டி இருப்பது அபத்தத்தின் உச்சம்

ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றாலும் அதற்கு முன்பாக அனைத்தும் கெட்டதாக போல் காட்டி இருப்பது இயக்குனரின் அனுபவமின்மையை காட்டுகிறது

இதில் மிகக் கொடுமை எது என்றால் தன் தாயின் தவறான உறவு பற்றி மகன் மற்றவர்களிடம் காமெடியாக பேசுவது

சான்றிதழ் என்று படத்திற்கு தமிழ் பெயர் வைத்த இயக்குனர் தமிழ் கலாச்சாரத்தை தமிழனின் வாழ்வியலை தவறான கண்ணோட்டத்தில் காட்டி ஒரு சிறந்த கதையை திரைக்கதை மூலம் சிதைத்து இருக்கிறார்

சான்றிதழ் படத்திற்கு நமது சான்றிதழ் மறுக்கப்படுகிறது

Must Read

spot_img