spot_img
HomeNewsபரம்பொருள் விமர்சனம்

பரம்பொருள் விமர்சனம்

சரத்குமார்,அமிதாஷ் பிரதான்,காஷ்மிரா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் பரம்பொருள்
கதைக்களம் சகோதரியின் வைத்திய செலவு 40 லட்சம் தேவைக்காக வீட்டு புகுந்து திருடும் நாயகன் காவல் துறை அதிகாரி வீட்டில் திருடும்போது மாட்டிக்கொள்ள பணம் நிறைய சம்பாதிக்கும் போதையில் உள்ள காவல்துறை அதிகாரி சரத்குமார் மாட்டிக்கொண்ட நாயகனிடம் பேரம் பேச ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு புத்தர் சிலை கிடைக்க அதன் மதிப்பு 60 கோடிக்கு மேல் அதை விற்கும் முயற்சியில் சரத்குமாரிடம் நாயகன் ஒப்பந்தம் போட சிலையை விற்கும் முயற்சி நடைபெறுகிறது இறுதியில் சிலையை விற்று பங்கு பிரித்து தன் சகோதரியை நாயகன் காப்பாற்றினானா என்பதை வெள்ளித்திரையில் காணுக

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் இது இரண்டாவது ரவுண்டு ஏற்கனவே போர்க்களம் படத்தின் வெற்றி தொடர்ந்து இந்தப் படத்திலும் அவருக்கு காவல்துறை அதிகாரி வேலை ஆனால் எதிர்மறை நாயகன் இருந்தாலும் படம் முழுக்க அவர் ராஜ்யம் தான் பணம் சம்பாதிக்க சிலையை வைத்து அவர் போடும் தகிடு வேலைகள் படம் பார்க்கும் மக்களை ரசிக்க வைக்கிறது

நாயகன் தன் சகோதரி மருத்துவ செலவுக்காக சரத்குமார் உடன் சேர்ந்து அவர் பண்ணும் மொள்ளமாரி வேலைகள் எத்தனைக்கு எத்தன் நான் தான் என்பது போல் போட்டி போட்டு சரத்குமாருடன் நடித்திருக்கிறார்
நாயகி படத்திற்கு தேவை என்பதால் கதையில் பங்களிப்பு இருக்கும் வகையாக சிலை வடிவமைக்கும் கலா ரசிகராக வருகிறார்
பாலாஜி சக்திவேல் இவரை பற்றி நாம் கூறுவதை விட படத்தைப் பார்த்து நீங்கள் ரசிப்பது தான் சரி
இயக்குனர் சி. அரவிந்த் ராஜ்அறிமுக இயக்குனர் தான் என்றாலும் கதையிலும் சரி திரைக்கதைகளும் சரி இயக்கத்திலும் சரி பல முன்னணி இயக்குனர்களுடன் போட்டி போடும் அளவுக்கு பரம்பொருள் திரைப்படத்தை வடிவமைத்திருக்கிறார்

கிளைமாக்ஸ் கட்சியில் நம் எண்ண ஓட்டத்தில் வரும் காட்சிகளை போல் இல்லாமல் எதிர்பாராத பல திருப்பங்களை தந்து நம்மை மிரள வைக்கிறார்
பரம்பொருள் —-இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் பொருளை ஈட்டி தரும் என்பதில் ஐயமில்லை⁹

Must Read

spot_img