spot_img
HomeNewsகிழபயலே விமர்சனம்

கிழபயலே விமர்சனம்

புது முகங்களின் அணிவகுப்பில் புதிய முயற்சியில் சிறிய முதலீட்டில் ஒரு தரமான படத்தை தர வேண்டும் என்ற எண்ணத்தில் வெளிவந்திருக்கும் படம் கிழபயலே

ஒரு குட்டி கதை நாம் அனைவருக்கும் தெனாலிராமனை பற்றி தெரிந்திருக்கும் அந்த தெனாலிராமன் கொள்ளை புறத்தில் கை கழுவு செல்லும்போது ஒரு திருடனைப் பார்த்து விடுகிறான் அவனைப் பிடிக்க தெனாலிராமனுக்கு பலம் இல்லை கத்தி ஊரைக் கூட்ட தைரியமும் இல்லை அதனால் தன் மனைவியிடம் கை கழுவு வாய் கொப்பளிக்க மீண்டும் மீண்டும் தண்ணீரைக் கேட்க மனைவியும் கொடுத்து கொண்டிருக்க இருட்டி விட்டது கணவனுக்கு பித்தம் தலைக்கேறி விட்டது என்று எண்ணி ஊர் மக்களை அழைக்க ஊர் மக்கள் வந்தவுடன் திருடன் பிடிபட்டு விடுகிறான் இந்த கதையை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியிருக்கிறார் யாழ்குணசேகரன்

ஒரு வயதான கிழவன் ஒரு கிராமத்து வீதியில் சைக்கிள் செல்ல பின்னால் வரும் மெர்சிடிஸ் காருக்கு வழி விடாமல் செல்ல பிரச்சினையாகி ஊர் தலையாரி முதல் பலர் காருக்கு வழிவிட சொல்லி பஞ்சாயத்து பண்ண அந்த வயதான கிழவன் வாய் திறக்காமல் சைக்கிளை குறுக்கு நிறுத்தி பிரச்சனை செய்ய படத்தின் இறுதியில் போலீஸ் வந்து பிரச்சனையை சரி செய்யும் முற்படும்போது மேற்கூறிய கதையை அந்த வயதான கிழவன் சொல்ல காரில் இருக்கும் பொருளைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் அது என்ன வருகிற செப்டம்பர் 21ஆம் தேதி வெள்ளி திரையில் காணுங்கள்

கதையின் நாயகன் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு வயதான கிழவன் அவரை மையப்படுத்தி கதை திரைக்கதை நகர்த்தி செல்கிறார் இயக்குனர் மேலும் பல முகங்களும் புது முகங்களை அவர்கள் நடிப்பை நாம் குறை சொல்ல முடியாது குறை இருப்பின் மன்னித்து வாழ்த்து சொல்வோம் வயதான பாத்திரத்தில் நடித்திருக்கும் கிருஷ்ணகுமார் நம் இந்தியன் தாத்தாவை ஞாபகப்படுத்துகிறார

கதைக்களம் முழுவதும் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கிராமத்து வீதியில் நடைபெறுகிறது குறைந்த முதலீடு என்றாலும் நிறைய சிக்கனத்தை கடைப்பிடித்து இருக்கிறார் இயக்குனர் காவலர்களுக்கு காவல் சீருடை கூட இல்லாமல் மஃபிடியில் வரவைத்து காட்சியை வடிவமைத்திருக்கிறார் எங்கே போலீஸ் ஸ்டேஷன் செட்டுக்கு சென்றால் வாடகை கேட்பார்கள் என்று பயந்து போலீஸ் என்று எழுதிய ஸ்டிக்கரை இரண்டு சக்கர வாகனத்தில் ஒட்டி அதன் மேல் சீருடை இல்லாத காவலரை அமர வைத்து காட்சியை வடிவமைத்திருக்கிறார்
இறுதியில் அந்த காரில் இருக்கும் பொருள் இதுதான் என்று நாம் கூறும் போது அந்த வயதானவரின் போராட்டம் சரிதான் என்று நம் மனதில் பட்டாலும் வசனத்திலும் காட்சி அமைப்பிலும் சரியான வலு இல்லாத காரணத்தினால் பார்ப்பவர்களை சலிப்படைக்க வைக்கிறது அதை சரி செய்து இருந்தால் ஒரு தரமான படத்தின் வரிசையில் கிழபயலே ஒரு இடத்தை பிடித்திருக்கும்

*KEZHAPAYA:*
Movie Stills Download Link: https://sendgb.com/v8DKr2mF06y

*CAST:*
– Kathiresakumar as Kezhapaya- Krishnakumar- Vijaya rana deeran- KN Rajesh- ‘Bakery’ Murugan- Anudiya- ‘Uriyadi’ Anandaraj as VAO

*CREW:*

Produced by Season Cinema – Yazh GunasekaranDirector – Yazh Gunasekaran Cinematography – AjithkumarEditor – KN RajeshMusic – KebiPRO – Nikil Murukan

Must Read

spot_img