விஷால் எஸ் ஜே சூர்யா ரித்து வருமா ஒய் ஜி மகேந்திரன் அபிநயா மற்றும் பலர் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மார்க் ஆண்டனி
கதைக்களம் பழைய விஜயகாந்த் படம் தவசி அதுல முத்து கால ஒரு காமெடி சீன்ல வா செத்து செத்து விளையாடலாம் அப்படின்னு காமெடி பண்ணி இருப்பாரு அதுதான் இந்த மார்க் ஆண்டனி யோட கதை
சரி கதைக்கு வருவோம் 1975 இல்ல மிகப் பெரிய ரவுடியாக இருக்கும் விஷாலும் எஸ் ஜே சூர்யாவும் மிகவும் நெருங்கி நண்பர்கள் எதிரிகளால் விஷால் கொல்லப்பட தனிப்பெரும் ரவடியாக எஸ் ஜே சூர்யா வளம் வந்து விஷாலின் மகன் விஷாலை ஒரு மெக்கானிக்காக வளர்க்கிறார்
இந்நிலையில் செல்வராகவன் காலத்தை கடந்து செல்லும் ஒரு டெலிபோனை கண்டுபிடிக்க எதிரிகளால் சுடப்பட்டு இறந்து விட அந்த டெலிபோன் மகன் விஷாலிடம் கிடைக்கிறது இந்த டெலிபோனில் காலத்தின் பின்னோக்கி பேசலாம் அப்படி விஷால் பேசும்போது தன் தந்தையை கொன்றது எஸ்டிஎஸ் சூர்யா என்று தெரிய வருகிறது
காலத்தை கடந்த டெலிபோன் மூலம் தன் தந்தையை எச்சரிக்கை செய்து அவர் கொலையாவதை தடுத்து எஸ் ஜே சூர்யா மரணம் அடைகிறார இதனால் மெக்கானிக்காக இருந்த மகன் விஷால் ரவுடியாக மாற எஸ் ஜே சூர்யா ரவுடியின் மகனாக இருந்த மகன் எஸ் ஜே சூர்யா மெக்கானிக் ஆகிறார்
காலத்தைக் கடந்த டெலிபோன் மகன் எஸ் ஐ சூர்யாவும் கிடைத்து 1995 இல் இருந்து 19 75 போன் செய்து தன் தந்தை எஸ் ஜே சூர்யாவிடம் விஷாலை கொலை செய்ய சொல்கிறார் பிறகு நடந்தது என்ன படம் பாருங்கள் உங்களுக்கே புரியும்
என்ன குழப்பமா இருக்கா அதே மாதிரி தான் படம் பார்த்த எல்லாருக்கும் இருக்கும் விஷாலுக்கு இரண்டு வேடம் எஸ் ஜே சூர்யாவுக்கு இரண்டு வேடம்
நடிப்பு அரக்கன் என்று எஸ் ஜே சூர்யாவுக்கு பட்டம் வழங்கியிருக்கிறார்கள் இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரமும் எஸ் ஜே சூர்யாவிற்கு கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறது
விஷால் இரட்டை வேடம் ஏதோ ஒட்ட வைத்தால் போல் உள்ளது படத்தை காமெடியாக நகர்த்திச் செல்ல இயக்குனர் மிகவும் சிரமப்பட்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்
ஒய் ஜி மகேந்திரன் அவர்களுக்கு அரவாணி வேடம் மிக அழகாக அந்த வேடத்தை அவர் செய்திருந்தாலும் அவரை சரியாக பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார் இயக்குனர்
இசை ஜிவி பிரகாஷ் இசையை அலற விட்டிருக்கிறார்
ஹை பிச்சில் டி ஆர் அவர்களையும் பாடவைத்து
இளைஞர்களை துல்லாட்டம் போட வைத்திருக்கிறார்கள்
படத்தில் ஒரு ஆறுதலான விஷயம் சில்க் ஸ்மிதாவை காட்டி இருக்கிறார்கள் எங்கே பிடித்தார்கள் அந்த நடிகை என்று தெரியவில்லை சில்க் ஸ்மிதாவின் ஜெராக்ஸ் போல் உள்ளார்
ஆங்காங்கே 90களில் உள்ள பாடல்களை சண்டைக்காட்சிகளில் பின்னணி இசையாக பயன்படுத்திருக்கின்றனர்
மார்க் ஆண்டனி மார்க்[ மதிப்பெண் ]இல்லாத ஆண்டனி