.‘நடிகர்கள் : நிரஞ்சனா நெய்தியார், ஸ்ருதி பெரியசாமி, அஷ்ரத்
இசை : தர்ஷன் குமார்
ஒளிப்பதிவு : சதீஷ் கோகுல கிருஷ்ணன்
இயக்கம் : ஜெயராஜ் பழனி
தயாரிப்பு : நடிகை நீலிமா இசைவாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ திரைப்படம், ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் 28ஆம் தேதி முதல் வெளியாகிறது. இப்படத்தினை ‘சூழ்’ படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கியிருக்கிறார். நடிகை நீலிமா இசை தயாரித்துள்ளார்.கடலோர கிராமத்தில் வசித்து வரும் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர், நிரஞ்சனா நெய்தியார். இவருடைய கிராமத்து மக்களின் வாழ்க்கையினை ஆவணப்படுத்துவதற்காக வருகிறார், ஸ்ருதி பெரியசாமி. ஒரே வீட்டில் தங்கும் இவர்களிடையே காதல் உருவாகிறது. இதை தெரிந்து கொள்ளும் நிரஞ்சனா நெய்தியாரின் தந்தை, அவருக்கு வேறு ஒரு பையனை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ஆபாசமில்லாத ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ படத்தின் கதை. நிரஞ்சனா நெய்தியார் மற்றும் ஸ்ருதி பெரியசாமி இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார்கள். தங்களுக்கு இடையிலான உறவும் காதல் தான் என்பதை நிரூபிக்க இருவரும் போராடும் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார்கள்.இயற்கைக்கு முரணான பாலியல் உறவு, தண்டனைக்குரிய குற்றமல்ல என்று கூறி, உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கைக்கு, எதிரான சட்டப் பிரிவு 377 ஐ, ரத்து செய்தது, உங்களுக்கு நினைவிருக்கலாம். இதன் படி இந்தியாவில் ஓரினச்சேர்க்கை என்பது தவறானது இல்லை. ஓரினச்சேர்க்கையாளர்களை துன்புறுத்துதல் குற்றமாகும். இதை முன் மொழிந்து பல படங்கள் வெளியான நிலையில், தமிழில் ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ உருவாக்கப்பட்டுள்ளது