spot_img
HomeNewsஎனக்கு எண்டே கிடையாது விமர்சனம்

எனக்கு எண்டே கிடையாது விமர்சனம்

விக்ரம் ரமேஷ் ஸ்வேதா சிவக்குமார் ராஜு கார்த்திக் வெங்கட்ராமன் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் எனக்கு எண்டு கிடையாது 
   கதைக்களம் கால் டாக்ஸி ஓட்டும் நாயகன் ஒரு பணக்கார பெண்மணி கால் டாக்ஸி ஏற்றிச் இன்று அவர் வீட்டில் இறக்கிவிட அந்த பெண்மணி உள்ளே வாருங்கள் சரக்கு அடித்து விட்டு போகலாம் என்று சொல்ல உள்ளே செல்லும் நாயகனும் அந்தப் பெண்மணியும் மதுவை ருசிக்க போதையின் உச்சத்தில் அந்தப் பெண் தன் இச்சைக்கு நாயகனை அழைக்க சபலத்தில் நாயகன் அந்த “”மாதுவையும் “”சுவைக்க உல்லாசம் உற்சாகமாக தன் கடமையை செய்த நாயகன் பக்கத்தில் ரூமிற்கு செல்லும்போது அங்க ஒரு நபர் கொலை செய்யப்பட்டு இருக்க
    பயத்தில் என்ன செய்வது என்று அறியாத நாயகன் வீட்டை விட்டு வெளியே செல்ல முயற்சிக்க வீட்டின் கதவு கடவுச்சொல் இல்லாமல் திறக்க இயலாமல் இருக்க பெண்மணி எங்கே செல்கிறீர்கள் என்று கேட்க பயத்தில் என்ன செய்வது இன்று அறியாத நாயகன் தற்செயலாக அந்தப் பெண்ணின் தலையில் தன் தலையால் முட்ட அவள் இறக்கிறாள்
   வெளியத் தப்பிப்பது எப்படி என்று தெரியாமல் தவிக்கும் நாயகன் குழப்பத்தில் இருக்கும்போது ஒரு திருடன் அந்த வீட்டின் உள்ளே நுழைய என்ன செய்வது என்று  நாயகன் முழிக்க 

    பல லட்சம் பணங்களுடன் ஒரு அரசியல்வாதி அந்த வீட்டின் உள்ளே வர மூவருக்கும் நடக்கும் போராட்டமும் வீட்டின் வெளியே செல்வதற்கு அவர்கள் படும் பாடும் எப்படி சென்றார்கள் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
   இயக்குனர் விக்ரம் ரமேஷ் இயக்கி நாயகனாகவும் நடித்திருக்கிறார் அறிமுக நாயகன் என்றாலும் நடிப்பு திறமையால் தன் அறிமுகம் அல்ல என்பது போல் சிறப்பாக செய்திருக்கிறார் கதைக்களம் ஒரு வீட்டிற்குள்ளே நடப்பது போல் திரைக்கதை அமைத்து அதை தோய்வில்லாமல் படம் பார்க்கும் நம்மையும் ஒரு பரபரப்புடன் வைத்து திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார்
   நாயகனாகவும் இயக்குனராகவும் வருங்காலத்தில் அவர் ஒரு தவிர்க்க முடியாத இடத்தில் தமிழ் சினிமாவில் பங்கு பெறுவார் என்பது  அசைக்க முடியாத உண்மை
    கதாபாத்திரங்கள் குறைவாக இருந்தாலும் நிறைவாக செய்து இருக்கிறார்கள் அனைவரும்

    அரசியல்வாதியும் திருடனும் தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருப்பது படத்திற்கு பலம் 

    நாயகி சுவேதா க்கு வேலை குறைவு என்றாலும் பிணமாக படம் முழுக்க மூச்சு விடாமல் படுத்திருப்பது என்பது சிரமமான காரியம் என்றாலும் சிறப்பாக செய்திருக்கிறார்
    படம் முடிந்து விட்டது என்று நாம் எழுந்திருக்கும் போது முடியவில்லை இன்னும் இருக்கிறது என்று கிளைமாக்ஸ் பிறகு ஒரு ஆன்டி கிளைமாக்ஸ் வைத்திருக்கிறார் இயக்குனர் மிகவும் சிறப்பு குறைந்த முதலீட்டில் ஒரு சிறப்பான படம் 
   எனக்கு எண்டு கிடையாது ஆம் இயக்குனருக்கும் நாயகனுக்கும் இந்த படம் எண்டு கிடையாது இன்னும் அவர் நடிப்பிலும் இயக்கத்திலும் பல படங்கள் வரும் என்பது  அசைக்க முடியாத நம்பிக்கை

Must Read

spot_img