திரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வெளி வந்திருக்கும் படம் த ரோடு
கதைக்களம் மதுரைக்கு அருகே உள்ள nh ரோட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விமர்சனம் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன
இது ஒரு புறம் இருக்க தன் மகன் பிறந்தநாளை கொண்டாட தன் கர்ப்பமாக இருப்பதால் காரில் பயணிக்க முடியாததால் மகளின் ஆசை நிறைவேற்ற காரில் கொடைக்கானலுக்கு திரிஷாவின் கணவரும் மகனும் செல்ல அந்த குறிப்பிட்ட இடத்தில் விபத்து ஏற்பட்டு இருவரும் மரணம் அடைகின்றனர்
விபத்து நடந்த பகுதியை பார்க்கும் திரிஷா அங்கு மீண்டும் ஒரு விபத்தை பார்க்கிறார் விபத்தில் அடிபட்ட நபர் தாகத்தில் தவிக்க தண்ணீருக்காக செல்லும் திரிஷா திரும்பி வந்து பார்த்தால் காரையும் காணவில்லை அந்த நபரின் காணவில்லை அங்கு விபத்து நடந்த சுவடு ஒன்றும் இல்லை போலீசில் புகார் அளிக்கும் திரிஷா சொல்லும் விஷயத்தை காவலர்கள் நம்ப மறுக்க தன்னிச்சையாக துப்பறிய திரிஷா முற்படும்போது நம்ப முடியாத விஷயங்களை கண்டுபிடிக்க இறுதியில் அது விபத்து அல்ல உருவாக்கப்பட்ட விபத்து என்று அறிந்து எதிரியை கண்டுபிடிக்க த்ரிஷா எடுக்கும் முயற்சியில் அதிர்ச்சிகரமான சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் ஏற்படுகின்றன
அது என்ன பாருங்கள் த ரோடு
படம் முழுக்க திரிஷாவின் ராஜ்யமே முற்பகுதியில் பாசம் சோகம் அதிர்ச்சி என பல பரிமாணங்கள் இருந்தாலும் பிறகு ஒரு துப்பறியும் நாயகியாக மாறுகிறார் கதையின் போக்கு திரிசாவை சுற்றி இருப்பதால் மற்ற நடிகர்கள் இருந்தாலும் நம் கண்ணிற்கு திரிசா மட்டுமே தெரிகிறார் அவரும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் விபத்துக்கான காரணங்களை கண்டுபிடிக்கும் திரிஷாவுக்கு அதை பார்க்கும் நமக்கும் இப்படி எல்லாம் நடக்குமா என்று ஒரு கேள்வி இருந்தாலும் இப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை இயக்குனர் தன் திரைக்கதையின் மூலம் சிறப்பாக சொல்லியிருக்கிறார் படம் ஆரம்பித்து 20 நிமிடங்களுக்குப் பிறகு படம் வேகம் எடுக்கிறது வேகத்திற்கு நடுவே ஒரு கிளைக்கதை சென்றாலும் கிளைமாக்ஸ் ல் அவற்றை ஒருங்கிணைக்கும் போது திரைக்கதை சிறப்பு என்பது நமக்கு தெரிய வருகிறது பல விஷயங்களை இயக்குனர் நமக்கு படத்தில் சொல்லி இருக்கிறார்
அதில் முக்கியமான விஷயம் எதுவென்றால் நமக்கு சிலர் வலுக்கட்டாயமாக வந்து உதவி செய்தால் அந்த உதவி நமக்கு தேவை என்றாலும் அந்த உதவியின் உள்நோக்கத்தை நாம் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் இல்லை என்றால் பல பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும்
தி ரோடு —இப்படியும் நடக்கலாம்