விஜய் ஆண்டனி ரம்யா நம்பீசன் நந்திதா மகிமா மற்றும் பல நடிக்க வெளி வந்திருக்கும் படம் ரத்தம் கதைக்களம் பத்திரிக்கை துறையில் மிகப் பிரபலமான துப்பறியும் பத்திரிக்கையாளராக இருந்த விஜய் ஆண்டனி தன் மனைவியின் இழப்புக்குப் பிறகு தன் குழந்தை வளர்ப்பதற்காக கல்கத்தாவில் செட்டில் ஆகி வாழ்க்கை நடத்த அவர் வேலை செய்த பத்திரிக்கையின் முதலாளியின் மகன் ஒரு நடிகரைப் பற்றி தவறாக எழுதியதால் அவர் ரசிகன் பத்திரிக்கை ஆபீசிலே கத்தியால் குத்தி கொலை செய்கிறான் பத்திரிக்கையின் முதலாளி மீண்டும் விஜய் ஆண்டனி எடிட்டர் பொறுப்பு ஏற்க சொல்ல முதலில் மறுத்த விஜய் ஆண்டனி பிறகு சென்னைக்கு வந்து தன் துப்பறியும் பத்திரிக்கையாளராக வேலையை தொடங்க முதலாளியின் மகன் கொலை செய்யப்பட்ட காரணம் அவர் எழுதிய கவர் ஸ்டோரி அல்ல வேறு ஒரு காரணத்திற்காக கொல்லப்பட்டதாக தன் துப்பறியும் திறமையால் கண்டுபிடிக்க அதேபோல் பல கொலைகள் நடக்க அதன் பின்னணியை துப்பறியும் போது எதிர்பாராத அதிர்ச்சி விஜய் ஆண்டனிக்கு காத்திருக்கிறது அது என்ன பாருங்கள் ரத்தம் படத்தை கிரைம் கதை என்றால்
விஜய் ஆண்டனிக்கு அல்வா சாப்பிடுவது போல் அந்த கதாபாத்திரத்துக்கு தன்னை உள்நிறுத்தி மெருகேற்றுவதில் விஜய் ஆண்டனிக்கு இணை விஜய் ஆண்டனி தான்
இந்தப் படத்திலும் அப்படிதான் முதல் 20 நிமிடம் குடிகாரனாக ஒரு சாதாரண மனிதனாக இருந்து பிறகு தன் துப்பறியும் திறமையால் அவர் கண்டுபிடிக்கும் விஷயங்கள் நம்மை அவருடனே அழைத்துச் செல்கிறது
ஒரு பாசமான தகப்பனாகவும் ஒரு துப்பறியும் பத்திரிக்கையாளனாகவும் தன் நடிப்பை வேறுபடுத்தி காட்டுவதில் விஜய் ஆண்டனி சிறப்பாக செய்திருப்பது அருமை
மூன்று நாயகிகள் மூவரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்தது மட்டுமில்லாமல் யாரும் விஜய் ஆண்டனி மீது காதல் பயப்படவில்லை என்பது மற்ற படத்திலிருந்து மாறுபட்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர அமுதன் கொலைகளை பல வழிகளில் நாம் திரையில் பார்த்திருப்போம் அதன் காரணங்களும் ஏகப்பட்ட விஷயங்களை இதுவரை பார்த்த படங்களில் நாம் கண்டிருப்போம் ஆனால் இந்த படத்தில் இயக்குனர் அமுதன் விஞ்ஞான உலகத்தில் கொலைகள் இப்படியும் நடக்கலாம் என்பதை தன் திரைக்கதை மூலம் புது முயற்சியில் சொல்லி இருக்கிறார் வசனங்கள் அனைத்தும் நம் காது கொடுத்து கேட்க வேண்டும் தவறினால் கதையின் ஓட்டத்தில் பார்ப்பவர்களுக்கு சிரமம் ஏற்படும் இசை கண்ணன் நாராயணன் படத்திற்கு பக்கபலம் மட்டுமல்ல உயிர் நாடியும் இசை தான் ஒளிப்பதிவு நம் கண்களுக்கு இம்சை கொடுக்காமல் மிகத் தெளிவாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் படத்தில் கொலையாளி யார் என்ற விஷயம் நமக்குத் தெரியும் போது அதிர்ச்சி மட்டுமல்ல ஆச்சரியமும் தொற்றிக் கொள்கிறது
“ரத்தம் “____விஜய் ஆண்டனியின் வெற்றியின் வரிசையில் ஒரு வைரக்கல்