ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்க தீபாவளி விருந்தாக வந்திருக்கும் படம் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்
கதைக்களம் மலை க்காடுகளில் யானை தந்தத்துக்காக பல ஏழைகளை கொலை செய்யும் கொடியவன் அவனைப் பிடிக்க முடியாமல் தவிக்கும் போலீஸ் அதிகாரி மலைவாழ் மக்களை பிடித்து சித்தரவதை செய்கிறார்
இது ஒரு புறம் இருக்க சினிமாவில் பிரபலமாக இருக்கும் நாயகன் ஒரு அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் அதேசமயம் அக்கட்சியில் இருக்கும் முக்கிய புள்ளி நடிகரின் படத்தை சில சில மாவட்டங்களில் வெளிவராமல் தடுத்து தன் அரவணைப்பில் இருக்கும் நடிகரின் படங்களை வெளியிட்டு தன் கட்சியில் இருக்கும் நடிகனின் செல்வாக்கை குறைக்க கோபத்தில் அந்த அரசியல்வாதிக்கு பக்கபலமாக இருக்கும் ரவுடிகளை கொலை செய்ய தன் சகோதரனான மலைவாழ் மக்களை பிடித்து சித்திரவதை செய்யும் போலீஸ் அதிகாரியை உதவிக்கு அழைக்க அவர் கொலை குற்றங்களில் தண்டனை பெற்று இருக்கும் ஐந்து நபரை அனுப்பி ஆளுக்கு ஒருவரை கொலை செய்ய சொல்கிறார் அதில் முக்கியமானவர் எஸ் ஜே சூர்யா அவர் கொலை செய்யப் போவது நாயகன் ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸ் கொன்றாரா என்பதே மீதிக்கதை
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜா படத்தை 1973 காலகட்டத்தில் நடப்பது போல் காட்டி இருக்கிறார் அதற்காக பல பல விஷயங்களை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார் படத்தை பேண்டஸி படமாக வடிவமைத்திருக்கிறார்
கதைக்குள் கதை அதற்கேற்ற திரைக்கதை கிளைமாக்ஸ் ல் நாம் எதிர்பார்க்காத திருப்பம் என நம்மை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்
நாயகன் ராகவா லாரன்ஸ் பேய்களின் நாயகன் ஆனா இவர் இந்த படத்தில் ரவுடியாக களம் இறங்கி அதற்குள் சினிமாவில் நாயகனாக நடிக்க ஆசைப்படும் கதாபாத்திரம் அவருக்கு கதை சொல்லும் பலர் அவருக்கு கதை சொல்ல வரும் எஸ் ஜே சூர்யா கதை சொல்லத் தெரியாமல் உங்கள் சொந்தக் கதையை எடுத்தால் விருது என சொல்லி படம் எடுக்கும் இயக்குனராக அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்
கத்தி கத்தி நடித்த எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் கத்தாமல் நடித்திருக்கிறார்
ராகவா லாரன்ஸ் மனைவியாக நிறைமாத கர்ப்பிணியாக நாயகி இவருக்கு கிளைமாக்ஸ்ல் அவர் நடிப்பு தீனிக்கு வேலை தந்திருக்கிறார் இயக்குனர்
கார்த்திக் சுப்புராஜா படத்தில் சினிமாவும் அரசியலும் கலந்து யாருடைய அரசியல் முகமும் யாருடைய சினிமா முகமும் மக்கள் மனதில் வந்து விடக்கூடாது என்பதில் இயக்குனர் தெளிவாக இருந்து சிறப்பாக செய்திருக்கிறார் படத்திற்கு பக்க பலம் ஒளிப்பதிவும் இசையும் தன் பங்குகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
ஜிகர்தண்டா xx தீபாவளி சரவெடி