spot_img
HomeNewsரைடு விமர்சனம்

ரைடு விமர்சனம்

விக்ரம் பிரபு ஸ்ரீ திவ்யா செல்வா அனந்திகா சனில்குமார், ரிஷி ரித்விக், டேனியல் அன்னி, ரெய்டு அனந்திகா மற்றும் பலர் நடிக்க இயக்குனர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கி வெளிவந்திருக்கும் படம் ரைடு

கதைக்களம் நேர்மையான போலீஸ் அதிகாரி விக்ரம் பிரபு ரவுடிகளை களை எடுக்கும் வழக்கமான சினிமாதான் இதில் இயக்குனர் எப்படி சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போம்

படம் முழுக்க கத்தி ரத்தம் துப்பாக்கி தான் விக்ரம் பிரபு படம் முழுக்க முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு நடித்திருக்கிறார் இவர் ஒரு போலீசாக இருக்கும் ரவுடி என்று தன்னைத்தானே கூறிக் கொள்கிறார் போதையில் இருக்கும் நாயகியை கடத்துகிறார் காப்பாற்றுகிறார் ஏன் என்று புரியவில்லை என்று நினைத்தால் அதற்குள் ஒரு பிளாஷ்பேக்

நாயகி அக்காதான் ஸ்ரீதிவ்யா ரவுடிகளை என்கவுண்டரில் சாகடிக்கும் விக்ரம் பிரபுவை பழிவாங்க காதலி ஸ்ரீதிவ்யாவை செய்கிறார்கள் இதுதான் பிளாஷ்பேக்

ஆனால் படம் முழுக்க நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலம் எதிர் காலம் நிகழ் காலம் என படத்தின் திரைக்கதையை குழப்படியாக அமைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்தி

வசனம் இயக்குனர் முத்தையா படம் முழுக்க அனல் தெறிக்கும் வசனம் ஆனால் ரசிக்க முடியவில்லை

படம் முழுக்க பின்னணி இசையையும் பாடலையும் அலற விட்டிருக்கிறார் இசையமைப்பாளர்  சாம் சி எஸ்

படத்தில் அதிக வேலை சண்டை பயிற்சியாளருக்கும் கலை இயக்குனருக்கும்

தான் ஒளிப்பதிவு தன் பங்கை சிறப்பாக பணியாற்றி இருப்பதில் நமக்கு மகிழ்ச்சி

படத்தில் ஒரு நாயகனை வைத்துக்கொண்டு பல வில்லன்களை களை எடுக்க வைத்திருக்கிறார் இயக்குனர்

ரைடு தீபாவளி— புஸ்வானம்

Must Read

spot_img