பாயல் ராஜ் பட் அஜ்மல் சைதன்யா கிருஷ்ணா அஜய் கோஸ் மற்றும் பலர் நடிக்க வெளி வந்திருக்கும் படம் செவ்வாய்க்கிழமை கதைக்களம் கிராமத்து சுவரில் கள்ளத்தொடர்பில் இருக்கும் நபர்களின் பெயரை யாரோ எழுதி வைக்க அவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் இதுபோல் இரு சம்பவங்கள் நடக்க காவல்துறை விசாரணையில் இறங்க பிரேதத்தை பிரேத பரிசோதனை செய்ய ஊர் ஜமீன்தார் ஒத்துக் கொள்ளாத காரணத்தால் அது தற்கொலை என்று முடிவாகிறது ஆனால் இரண்டாவது மரணம் நிகழும் போது அது பிரேத பரிசோதனைக்கு சென்று கொலை என்று முடிவாகிறது கொலை என்று தெரிந்தவுடன் காவல் துறையும் ஊர் மக்களும் கொலையாளி தேடி அலைய இறுதிக்காட்சியில் கொலையாளி யார் என்று தெரிய வரும் போது நமக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் தொற்றிக் கொள்கிறது அது யார் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் படத்தில் அனைத்து முகங்களும் நாம் பார்த்திடாத தெலுங்கு மற்றும் கன்னட நடிகர்கள் நாயகி கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு தைரியம் வேண்டும் எந்த ஒரு நாயகிக்கும் இந்த தைரியம் வராது ஆனால் செவ்வாய்க்கிழமை படத்தின் நாயகி துணிந்து களம் இறங்கி இருக்கிறார் அப்படி என்ன கதாபாத்திரம் அவளுக்கு காம உணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரப்பதால் அவளால் காம உணர்வுகளை அடக்க முடியாமல் தன் காலேஜ் வாத்தியாரிடம் கற்பை இழக்க அந்த வாத்தியார் இவளை சுவைத்து விட்டு வேறொரு பெண்ணை மணக்கிறார் நாயகிக்கு பார்க்கும் ஆண்கள் எல்லாம் தன் வாத்தியார் போல் தெரிய தன் காம இச்சையை தீர்த்துக்கொள்ள அவள் மீது ஊர் மக்கள் பழி சுமத்தி ஊரை விட்டு விரட்ட அவர் தற்கொலை செய்து கொள்கிறார் அது தற்கொலை இல்லை கொலை தான் என்று தெரிய வர இந்த சுவர் எழுத்துக்களும் அதில் இருக்கும் நபர்கள் தற்கொலை அல்ல கொலை தான் என்று கண்டுபிடிக்கும் காவல்துறை அதற்கான காரணங்களை கொலையாளி கூறும் போது நமக்கும் நாயகியின் மேல் ஒரு பரிதாபம் ஏற்படுகிறது தன் நடிப்பாற்றலால் நாயகி நம்மை கட்டி போட்டு விட்டு விடுகிறார் காமயிச்சை வரும் போதெல்லாம் கையில் ரப்பர் பேண்டை போட்டுக்கொண்டு அதை இழுத்து இழுத்து அடித்து காயப்படுத்தி தன் உணர்வுகளை அடக்கும் காட்சியில் இயக்குனரின் எண்ணம் வெளிப்படுகிறது உடன் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளும் தங்கள் பாத்திரம் அறிந்து சிறப்பாக தங்கள் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கின்றனர் படத்தில் காதல் காமம் கள்ளக்காதல் பேய் சாமி என அனைத்து கலவைகளின் கலந்து ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக தந்திருக்கிறார் இயக்குனர்
செவ்வாய்க்கிழமை—- பெண்ணுக்கும் பெண்மைக்கும் நடக்கும் போராட்டம்