spot_img
HomeNewsதொல் திருமாவளவன் பாராட்டிய அம்புநாடு ஒன்பது குப்பம் விமர்சனம் 

தொல் திருமாவளவன் பாராட்டிய அம்புநாடு ஒன்பது குப்பம் விமர்சனம் 

ஆதிக்க  வர்க்கம் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாக வைத்து தங்கள் பொழப்பை நடத்தி வரும் மேல் ஜாதி மக்களுக்கு ஒரு சாட்டை அடியாக வந்திருக்கும் படம்அம்புநாடு ஒன்பது குப்பம்
கே.பிலிம்ஸ் சார்பில், பூபதிகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம், ‘அம்புநாடு ஒன்பது குப்பம்’. கதையின் நாயகனாக சங்ககிரி மாணிக்கம், நாயகியாக ஹர்சஷிதா நடித்திருக்க இவர்களுடன்  பிரபுமாணிக்கம், மதன் ரமேஷ் மித்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.   திரை கதை அமைத்திருக்க இயக்கியிருக்கிறார், ராஜாஜி

.பபுதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பின் தங்கிய கிராமம். இங்கு, ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஊர்த்திருவிழா வழக்கமபோல் நடக்கிறது. அந்த திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில், ஆதிக்க சாதியினருக்கு இடையே பகை மூழ்கிறது. இந்நிலையில் கோவில் திருவிழாவிற்கு, தன் நண்பர்கள் உடன் வந்த பட்டியல் இனத்தை சேர்ந்த  அந்த கிராமத்து இளைஞர், கோவில் பூசாரி கயில் இருக்கும் தாம்பூலத்தட்டினை தொட்டு விபூதி எடுத்து விடுகிறார். இதனால் தீட்டு ஏற்பட்டதாக அந்த கிராமம் பரபரப்பு அடைகிறது. அதை தொடர்ந்து, அங்கு கலவரம் ஏற்படுகிறது.

 ஆதிக்க சாதியினர், யாருக்கு முதல் மரியாதை என்பதை விட்டு விட்டு, அந்த இளைஞரை தீர்த்துகட்ட முடிவு செய்கின்றனர். இதன் பின்னர் என்ன நடந்தது? என்பதை, மிகைப்படுத்தாமல் சொல்லியிருப்பதே ‘அம்புநாடு ஒன்பது குப்பம்’ படத்தின் கதை

.ஒரு சிறிய பட்ஜெட்டில், எந்த அளவுக்கு நியாயமாக எடுக்கமுடியுமோ அந்த அளவிற்கு நேர்மையாக வே படமாக்கியிருக்கிறார்கள். இன்றைய அரசியல் கள நிலவரத்தையும், அதனால் கிடைக்கக்கூடிய உரிமைகள், ஒருபோதும் ஒடுக்கப்பட்டவர்களை சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் ஆதிக்க சாதியினர் எப்படி செயல்படுகிறார்கள், என்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கியிருக்கிறார்கள்.

நடிகர், நடிகைகளை பொறுத்தவரை, அனைவரும் புதுமுகங்கள், அவர்களுக்கு இன்னும் பயிற்சி வேண்டும். கிடைத்த பொருளாதார வசதிகளை கொண்டு படமாக்கியிருக்கிறார்கள்புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று வரை இருக்கும் ஒன்பது நாட்டு ஊர் தலைவர்களை பற்றி படம் பேசுவது குறிப்பிடத்தக்கது. சமூக ரீதியிலான பெரிய மாற்றங்களை உருவாக்க இந்த மாதிரியான படங்கள் அவ்வப்போடு வரவேண்டும். படத்தின் ஒளிப்பதிவு படத்தின் ஓட்டத்தை தடைப்படுத்துகிறது

இன்றைய சமூகத்துக்கு தேவையான படம்

Must Read

spot_img