spot_img
HomeNewsஜோ விமர்சனம்

ஜோ விமர்சனம்

ரியோ ராஜ் மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிக்க வெளி வந்திருக்கும் படம் ஜோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு முழு நீள காதல் கதை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது அதை போக்கும் வண்ணம் வந்திருக்கும் படம் ஜோ கதைக்களம் கல்லூரியில் படிக்கும் நாயகன் நாயகி காதல் செய்ய

மேற்படிப்பு முடிந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்ய படிப்பு முடிந்ததும் நாயகியின் வீட்டார் கல்யாணத்துக்கு சம்மதிக்காத காரணத்தால் நாயகி தற்கொலை செய்து கொள்கிறார்

நாயகனுக்கு கல்லூரியின் சேர்மனின் மகளை நிச்சயம் செய்ய அந்தப் பெண் நாயகனிடம் போன் செய்து தான் வேறு ஒருத்தனை விரும்புவதாக சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொல்ல ஆனால் கல்யாணம் நடந்து விடுகிறது

இதனால் நாயகன் ரியோ ராஜிடம் ஒரு தனிமையை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறார் இந்நிலையில் தன் மனைவி யாரை காதலித்தாரோ அவரையே மணமுடிக்க முடிவு செய்த நாயகன் அந்த காதலனை தேடும் போது ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்படுகிறது அது என்ன பாருங்கள் ஜோ படத்தை

நாயகன் ரியோ ராஜ் ஒரு யதார்த்த நாயகனாக வருங்கால காதல் இளவரசனாக தன் நடிப்பாற்றலால் ரசிகனை கட்டிப்போட்டு விடுகிறார் காதலியிடம் காதலை சொல்ல அவர் படும் பாடு காதலிக்கும் ஆண்களுக்கு மட்டுமே தெரியும் கல்லூரி வாழ்க்கையை அவர் வாழ்ந்து நம் கல்லூரி வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கிறார் தமிழ் சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாத நாயகனாக ரியோ ராஜ் வருவார் என்பது முடியாத உண்மை

நாயகி மாளவிகா மனோஜ் நம் பக்கத்து வீட்டுப் பெண்ணை பார்ப்பது போல் முகம் காதலனிடம் அவள் சண்டை போடுவது அனைத்து பெண்களுக்கும் உள்ள தவிர்க்க முடியாத நிகழ்வுகள் பழைய ரேவதி ஞாயப்படுத்திக்கிறார் நாயகி

நாயகனின் நண்பர்களாக வருபவர்கள் நகைச்சுவை பகுதியை நிறைவு செய்கிறார்கள்

கிளைமாக்ஸ் கட்சியில் நாம் எதிர்பார்க்காத திருப்பத்தை இயக்குனர் நமக்கு அளித்திருக்கிறார்

ஆனால் திரைக்கதையில் எந்த ஒரு காட்சியும் நம்மை fபீல் செய்ய முடியவில்லை

ஜோ இது ஒரு கல்லூரி காதல்

Must Read

spot_img