spot_img
HomeNewsசமரன்’ படத்தின் கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜிக்கு கிடைத்த பெருமை மிக்க ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’...

சமரன்’ படத்தின் கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜிக்கு கிடைத்த பெருமை மிக்க ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ விருது!

நடிகர் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் ‘சமரன்’ படத்தின் கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜிக்கு கிடைத்த பெருமை மிக்க ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ விருது!

கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜி கலைஞரின் கதை, வசனத்தில் ‘கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் கலை இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானார். இதுவரை 15க்கும் மேற்பட்டப் படங்களில் பணியாற்றியுள்ளார். இதுமட்டுமல்லாது ஆச்சி மசாலா, ராம்ராஜ் என பல முன்னணி விளம்பர பிராண்டுகளிலும் இவர் பணி புரிந்துள்ளார். திரு. சாபு சிரில் மற்றும் திரு. கதிர் இவர்களின் அறிவுரையோடு இயக்குநர் சிவாமெடின் இயக்கத்தில் வெளியான ‘3.6.9’ திரைப்படத்திலும் இவர் பணியாற்றினார். இந்தப் படத்தில் இவரது கலை இயக்கத்திற்காக ’ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ என்ற பெருமை மிக்க விருது கிடைத்துள்ளது.

நடிகர் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரக்கூடிய ‘சமரன்’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்த போது இந்த விருது அறிவிக்கப்பட்டது அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் கலை இயக்குநர்களில் இவர்தான் இந்த விருதை முதன் முதலில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தை சாதித்ததற்காக தன்னுடன் பயணித்த தனது குடும்பம், நண்பர்கள் மற்றும் திரைத்துறையினருக்கு இந்த தருணத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் ஸ்ரீமன் பாலாஜி.

Must Read

spot_img