ஹரிஷ் கல்யாண் இந்துஜா எம் எஸ் பாஸ்கர் ரமா மற்றும் பலர் நடிப்பில் வெளி வரவிருக்கும் படம் பார்க்கிங் கதைக்களம் வாடகை வீட்டில் குடியிருக்கும் எம் எஸ் பாஸ்கர் வீட்டின் மாடி வீட்டிற்கு குடி வருகிறார் ஹரிஷ் கல்யாண் புதிதாக கார் வாங்கும் ஹரிஷ் கல்யாண் வீட்டின் கீழ் தளத்தில் நிறுத்த இரு சக்கரம் வாகனம் வைத்திருக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் பிரச்சனை ஏற்பட எம் எஸ் பாஸ்கர் புது கார் வாங்கி கீழ்தளத்தை நிறுத்துகிறார்
ஹரிஷ் கல்யாண் கார் நிறுத்த இடமில்லாமல் தவிக்க இருவருக்கும் ஏற்படும் ஈகோ என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதை மிக அழகாக நாம் ரசிக்கும் வண்ணம் தந்திருக்கிறார் இயக்குனர்
நாயகன் ஹரிஷ் கல்யாண் திருமணத்திற்கு பிறகு வந்திருக்கும் படம் தான் காதலித்து மணந்த மனைவி இந்துஜா கர்ப்பமாக இருக்க மருத்துவமனை செல்ல கால் டாக்ஸி கிடைக்காததால் கார் வாங்குகிறார் இரவில் கார் நிறுத்தும் போது எம்.எஸ். பாஸ்கரின் இரு சக்கர வாகனம் அவர் காரை சிறு கோடு போட ஆரம்பிக்க அதனால் ஏற்படும் பிரச்சனை பெரிதாகி பெரிதாகி ஹவுஸ் ஓனரிடம் சென்று அவர் கார் இங்கேதான் நிறுத்துவார் என்று ஹவுஸ் ஓனர் சொல்ல மிக்சி ரிப்பேர் செய்ய காசு தராமல் தானே சரி செய்யும் எம் எஸ் பாஸ்கர் தன் ஈகோவின் காரணமாக முழு பணத்தை தந்து கார் வாங்கி அந்த இடத்தில் நிறுத்த ஹரிஷ் கல்யாண் ஐடியில் வேலை செய்யும்போது மதியம் விடுமுறை எடுத்து காரை அங்கு நிறுத்த எம் எஸ் பாஸ்கர் அங்கு நிறுத்த முடியாமல் போக இருவரும் ஒரே இடத்தில் காரை நிறுத்த போட்டி போட்டுக் கொண்டு வர ஹரிஷ் கல்யாண் ஜெயிக்க காரை வெளியே எடுக்க நீர் இறைக்கும் மோட்டரை ரிப்பேர் செய்து பிளம்பரை வரவைத்து ஹரிஷ் கல்யாண் காரை வெளிய எடுக்க வைக்க ரிப்பேர் முடிந்ததும் எம் எஸ் பாஸ்கர் காரை உள்ள நிறுத்த எடுக்கும்போது அதற்கு முன்பாக ஹரிஷ் கல்யாண் செய்து விடுகிறார்
கோபத்தில் எம்எஸ் பாஸ்கர் கார் கண்ணாடியை உடைக்க ஹரிஷ் கல்யாண் அவரை அடித்து விடுகிறார் இதற்கு பிறகு நடக்க சம்பவங்கள் பரபரப்பாக நமக்கு சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆனால் முதல் பாதியில் இருந்த இயல்பான காட்சிகளின் அழுத்தம் பிற்பகுதியில் செயற்கையாக இருப்பது நமக்கு ஒரு அலுப்பு தட்டுகிறது
காவல் நிலையம் அடிதடி என பிற்பகுதி ஒரு மாதிரியாக சென்றாலும் மொத்தத்தில் பார்க்கிங் என்ற சின்னக் கருவ வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரத்துக்கு மேல் விறுவிறுப்பாக நம்மை கட்டி போட்டு வைத்திருப்பது இயக்குனர் திறமை
காதல் நாயகனாக உலா வந்த ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் பொறுப்பான கணவனாக ஒரு யதார்த்த மனிதனாக ஒரு சராசரி வாழ்க்கை வாழும் எதார்த்த வாதியாக கோபம் இயலாமை ஈகோ என பல பரிமாணங்களை இந்த படத்தில் வழங்கி நான் எந்த கேரக்டருக்கும் தயார் என்பதை நிரூபித்திருக்கிறார்
எம்எஸ் பாஸ்கர் இந்த கதாபாத்திரத்திற்கு இவரை தவிர வேறு யாரும் சிறப்பாக செய்ய முடியாது என்பது நமது கருத்து இவரை நடிப்பு அரக்கன் என்று சொல்வதா இல்லை நடிப்பு ராட்சசன் என்று சொல்வதா என்று நமக்கு தெரியவில்லை அந்த அளவிற்கு இவர் கதாபாத்திரத்துக்குள் வாழ்ந்து இருக்கிறார்
சலிப்பு மனக்கசப்பு கோபம் வெறுப்பு அனைத்தையும் எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு செய்திருக்கிறார் இந்த படம் இவருக்கு விருதுக்கு பரிந்துரைக்கும் என்பதில் நமக்கு ஐயமில்லை
எம் எஸ் பாஸ்கரின் மனைவியாக ரமா கணவனின் சொல் தட்டாத மனைவி இட்லிக்கு சட்னி கூட கணவன் தான் சொல்ல வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு ஒவ்வொரு இல்லத்தரசியும் மனக்குமுறல் என்பது படம் பார்க்கும் இல்லத்தரசிகளுக்கு புரியும் மற்றவர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கின்றார்
பார்க்கிங் கண்டிப்பாக –டோக்கன் (டிக்கெட்) வாங்கலாம்