அன்னபூரணி விமர்சனம்

65

நயன்தாரா ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமன் எஸ் இசையமைத்திருக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ஜி துரைராஜ் (கலை), அருள் சக்தி முருகன் (வசனம்), பிரசாந்த் எஸ் (கூடுதல் திரைக்கதை), சஞ்சய் ராகவன் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), லிண்டா அலெக்சாண்டர

கதைக்களம் திருச்சி வரதராஜ பெருமாளுக்கு பிரசாதம் செய்பவருக்கு மகளாக இருக்கும் நயன்தாரா சிறுவயதில் ஒரு அதிசய ஆற்றல் படைத்த சிறுமியாக இருக்கிறார் எந்த ஒரு உணவுப் பொருளையும் சுவைத்து அதில் நிறை குறைகளை கூறி குறை இருப்பின் அது நிவர்த்தி செய்யும் அதிசய சிறுமியாக இருக்கும் நயன்தாரா
சிறு வயது முதல் இந்தியாவின் மிகப்பெரிய செப்பாக இருக்கும் சத்யராஜ் போல் இந்தியாவின் மிகப்பெரிய செப் ஆகும் ஆசையில் கேட்டரிங் காலேஜில் சேர்க்க தந்தையிடம் கேட்க அவர் மறுத்து எம்பி ஏ கோர்ஸில் சேர்க்க நயன்தாரா வீட்டுக்குத் தெரியாமல் கேட்டரிங் காலேஜில் செல்கிறார்

இது அறிந்த அவர் தந்தை நயன்தாரா விற்கு திருமண ஏற்பாடு செய்ய யாருக்கும் தெரியாமல் சென்னை வந்து  சத்யராஜ் இடம் வேலைக்கு சேருகிறார்

நயன்தாராவின் திறமையால் சத்யராஜின் நன்மதிப்பை பெறுகிறார் இதனால் அங்கு முதன்மை செஃப் ஆக இருக்கும் சத்யராஜின் மகனுக்கு நயன்தாராவின் மேல் வெறுப்பு ஏற்பட்டு கிட்சனில் விபத்து ஏற்படுத்தி நயன்தாராவை மருத்துவமனைக்கு அனுப்ப அங்கு நயன்தாராவிற்கு சுவை உணரும் தன்மை போய் விடுகிறது அதாவது இனிப்பு புளிப்பு காரம் எந்த சுவையும் அவரின் நாக்குக்கு தெரியாது இப்படி இருக்கும் நயன்தாரா எப்படி இந்தியாவின் நம்பர் ஒன் செஃப் ஆக மாறுகிறார் என்பதே இப்படத்தின் கதை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இப்படத்தில் ஐயராத்து பெண்ணாக வலம் வருகிறார் தந்தையின் பாசத்துக்கு கட்டுப்பட்டு மகளாக அதேசமயம் தன் லட்சியம் இந்தியாவின் நம்பர் ஒன் செப்பாக ஆக வேண்டும் என்பதற்காக காலேஜில் அவர் சிக்கன் கட் செய்வது முதல் பிரியாணி சமைப்பது வரை என தன் சமுதாயத்தின் எதிர்ப்பை மீறி 

தந்தையின் கோயிலில் பிரசாதம் செய்யும் வேலை பறிபோன பிறகும் தன் லட்சியத்தில் உறுதியாக இருக்கும் நயன்தாரா இருதலை கொல்லி எறும்பாக சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்

கிளைமாக்ஸ் ல் கண்ணைக் கட்டிக் கொண்டு உணவை சுவைத்து என்ன உணவு என்று கண்டுபிடிக்கும் பரபரப்பு நம்மை தொற்றிக் கொள்கிறது

ஜெய் படத்தின் நாயகன் அதாவது நயன்தாரா விற்கு நண்பனுக்கு மேல் காதலனுக்கு கீழ் என நாயகன் வேலையை அவர் சிறப்பாக செய்கிறார்

சத்யராஜ் நயன்தாராவிற்காக தான் வேலை செய்யும் ஹோட்டல் வேலையை ராஜினாமா செய்யும் அவரின் பங்களிப்பு சிறப்பு

படத்தின் வில்லன் கார்த்திக் குமார் அருமையாக செய்திருக்கிறார் இவரை ஏன் தமிழ் சினிமா இன்னும் கண்டு கொள்ளவில்லை என்பது நமக்குத் தெரியவில்லை
இயக்குனர் திரைக்கதையை மிக அருமையாக கையாண்டு இருக்கிறார் எங்கே இந்து முஸ்லிம் பிரச்சினை வந்து விடப் போகிறது என்பதற்காக ஆரம்பத்தில் பெருமாள் துலுக்க நாச்சியாரை மணமுடித்த கதை மற்றும் நயன்தாரா பிரியாணி சமைப்பது சுவைப்பது பிராமண சமுதாயத்தில் எதிர்ப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக அதற்கான காரணங்களையும் டயலாக் வசனத்தின் மூலம் அருமையாக சொல்லி இருக்கிறார் ஒரு சிறு கதை களத்தை வைத்துக்கொண்டு இரண்டரை மணி நேரம் நகர்த்துவது என்பது மிக சாதாரண விஷயம் அல்ல தன் திரைக்கதையின் மூலம் அதை சிறப்பாக செய்து இருக்கிறார்

ஆனால் படம் பார்த்த நமக்கு ஏதோ டிவி கேம் ஷோ பார்த்தது போல் இருக்கிறது

அன்னபூரணி –சமையல் கேம் ஷோ