வா வரலாம் வா விமர்சனம்

75

பாலாஜி முருகதாஸ் கிங்ஸ்லி மைன் கோபி வையாபுரி மகானா காயத்ரி ரமா மற்றும் பலர் நடிக்க வெளி வந்திருக்கும் படம் வா வரலாம் வா 

சிறையில் தண்டனை அனுபவித்து
விடுதலையாகி சிறையிலிருந்து வெளியே வருகிறார்கள். நாயகனும் நண்பன் கிங்ஸ்லி வேலை தேடி அலைகிறார்கள். ஆனால் யாரும் வேலை கொடுக்கவில்லை

. காவல்துறையால் பல வருடங்களாக தேடப்படும் கடத்தல் மன்னன் மைம் கோபியிடம் வேலைக்கு சேருகிறார்கள். பேருந்து ஒன்றை கடத்த திட்டமிடுகிறார்கள். அந்த பேருந்தில் 40 குழந்தைகளும், நாயகிகளான மஹானா சஞ்சீவும் மற்றும் காயத்ரி ரெமாவும் இருக்கிறார்கள். முதலில் அவர்களை டீச்சர் என்று நம்பிய நாயகன் பிறகு அவர்கள் பெரிய கோடீஸ்வரன் மகனை அறிந்து அவர்களை வைத்து பணம் பறிக்க திட்டம் போடுகிறார்கள் அதற்காக காதலிப்பது போல் நடிக்க பிறகு நடிப்பு காதல் ஆகி விடுகிறது இது ஒரு புறம் இருக்க இவர்களை தேடுகிறார் மைன் கோபி அவர்களிடம் இவர்கள் சிக்கினார்களா இவர்கள் காதல் வெற்றி பெற்றதா என்பதை மீதி கதை
.

நாயகனாக அறிமுகமாகியுள்ள பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் தன் யதார்த்த நடிப்பால் அறிமுக நாயகன் போல் நமக்கு தெரியவில்லை காதல் நகைச்சுவை ஆக்சன் என தமிழ் சினிமா நாயகனுக்கு என்ன வேண்டுமோ இவை அனைத்துமே சிறப்பாக செய்திருக்கிறார்
கதாநாயகிகளான மஹானா சஞ்சீவ் மற்றும் காயத்ரி ரெமா முதலில் இவர்கள் மேல் வெறுப்பு ஏற்பட பிறகு நாயகனின் கதை கேட்டு காதல் வலையில் விழுந்து விடுகிறார்

ரெடின் கிங்ஸ்லி நண்பனாக காமெடி நடிப்பில் நம்மை கலகலப்பாக படத்தில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாமல் நம்மை அழைத்துச் செல்கிறார்

சிங்கம் புலி, தீபா ஆகியோரது கூட்டணி கொஞ்சம் ஆர்டிபிசியல் ஆக இருக்கிறது சரவண சுப்பையா காவல்துறை அதிகாரியாக கம்பீரமாக செய்து இருக்கிறார், .

எல்.ஜி.ரவிசந்தர் கதை, திரைக்கதை, வசனம் படத்திற்கு பக்க பலம ஒரு நகைச்சுவை கலாட்டாவாக வா வரலாம் படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் எஸ்.பி.ஆர் இயக்கியுள்ளார்.

வா வரலாம் வா -நகைச்சுவை கலாட்டா