தன் மனைவியை காரில் விட்டுவிட்டு கணவர், பெட்ரோல் வாங்கச் செல்கிறார். அப்பொழுது
அங்கு ஒரு கொலை விழுகிறது அவரது தம்பியான நாயகன் காளிதாஸ் ஜெயராம் அக்காவை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவதோடு, கொலைக்கான பின்னணியையும், அந்த கொலையாளி யார்?.
அந்த முயற்சியில் யகனின் குடும்பம் மீது அடுத்தடுத்து தாக்குதலும் நடக்கத் துவங்குகிறது.
தன் குடும்பத்தைப் பாதுகாத்துக் கொண்டே நாயகன் அந்தக் கொலை குற்றவாளியை கண்டுபிடித்தானா..?
எப்படி கண்டுபிடித்தான்…?
அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறதுகதை
.நாயகனாக நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராம், துப்பறிவதில் காவல்துறையை விட அதிக திறன் கொண்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருப்பதோடு, அக்கா மீதான பாசத்தையும், அவர் வாழ்வில் நடந்த மர்மத்தையும் எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற தீவிரத்தை தனது நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.அவரது அக்காவாக நடித்திருக்கும் நமீதா ப்ரமோத் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக போலீஸ் விசாரணையின்போது அவரின் அழுகையும், உடல் மொழியும், வசன உச்சரிப்பும் அற்புதம் போலீஸ் அதிகாரியாக வரும் அஸ்வின் குமார் மேற்சொன்னபடி நாயகன் கொடுக்கும் தடயங்களைப் பெற்றுக் கொண்டு, கடைசி நேரங்களில் நாயகனுக்கு வந்து பந்தோபஸ்து கொடுக்கும் வேலையை செவ்வனே செய்து இருக்கிறார்.படத்தில் அவ்வபோது காட்டப்படும் ரஜினிகாந்த் முகம் மற்றும் நாயகனின் மாஸ் காட்சிகள் ரசிகர்கள் சோர்வடையாமல் இருக்க உதவியிருப்பது போல், துப்பறியும் காட்சிகள் திரைக்கதையை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்த உதவியிருக்கிறது இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
துப்பறிந்து கண்டுபிடிப்பதே ‘அவள் பெயர் ரஜ்னி’.