பிரபாஸ் சுருதிஹாசன் பிரித்திவிராஜ் மைன் கோபி ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடிக்க வெளி வந்திருக்கும் பான் இந்திய படம் சலார்
கதைக்களம் இரு நண்பர்களின் கதை இது மன்னரின் மகனான சிறுவன் பிருத்திவிராஜ் தன் நண்பன் சிறுவன் பிரபாஸ் நண்பன் பிருதிவிக்காக எதையும் செய்வான் பிரபாஸ் அதேபோல் பிரபாஸுக்காக எதையும் செய்வான் பிரித்திவிராஜ் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இருவரும் பிரிய ஒரு கட்டத்தில் பிரபாஸின் உதவி தேவைப்பட அவரை அழைத்துக் கொண்டு தன் சாம்ராஜ்யத்திற்கு வருகிறார் பிரித்விராஜ் பிறகு நடப்பது என்ன இதுவே சலார் படத்தின் கதை
நாயகன் பிரபாஸ் பாகுபலி ன் மறு அவதாரமாக இந்த படத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார் ஒரு நாயகனுக்கு எந்த அளவுக்கு பில்டப் கொடுக்க முடியுமோ அதற்கு அதிகமாக இந்த படத்தில் பிரபாஸுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார் இயக்குனர் அவர் உடல்வாகும் உயரமும் எந்த பில்டப்புக்கும் நான் தயார் என்பது போல் இருக்கிறது தாய்க்கு அடங்கிய மகனாக நண்பனுக்காக எதையும் செய்யும் தோழனாக என பல பரிமாணங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் பிரபாஸ்
பிருத்திவிராஜ் தன் நண்பனின் தாய்க்காக தன் கௌரவத்தின் அடையாளமாக இருந்த கை காப்பையே தூக்கி எறிகிறது ஆனால் இவர் கதாபாத்திரம் என்ன நல்லவரா/??? இல்லை அரசாட்சிக்கு ஆசைப்படுபவர் பாசத்துக்கு கட்டுப்பட்டவரா??? இல்லை பதவிக்காக எதையும் செய்பவரா?? என்பதை இரண்டாம் பாகம் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்
சுருதிஹாசன் நமக்கு கதை சொல்ல ஒரு கதாபாத்திரம் அது மைன் கோபி அதைக் கேட்பது சுருதிஹாசன் நம்மளும் உட்பட இரண்டாம் பாகத்தில் வேலை இருக்கும் என்று நம்புகிறோம்
ஈஸ்வரி ராவ் கண்டிப்புடன் மகனை வளர்க்கும் தாயாக ஊரில் இருக்கும் மாணவர்களுக்கு டீச்சர் ஆக இவர் கதாபாத்திரத்தில் தன்மையை புரிந்து கொள்ள இரண்டாம் பாகம் வரை காத்திருக்க வேண்டும்
இன்னும் பல கதாபாத்திரங்களின் தன்மை அறிந்து கொள்ள பாகம் இரண்டு வரை காத்திருக்க வேண்டும்
இயக்குனர் ஏற்கனவே கே ஜி எஃப் வெற்றியை கொண்டாடியவர் என்பதால் அதன் பாதிப்பு சில இடங்களில் மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் தெரிகிறது
படத்தில் கத்தி ரத்தம் துப்பாக்கி தோட்டாக்கள் இவை தான் முன்னணி நாயகர்களாக நம் கண் முன் தெரிகின்றன மற்றவை எல்லாம் பின்னால்தான்
சலார் —-துரோகத்தின் வெளிப்பாடு