spot_img
HomeNewsமதிமாறன் விமர்சனம்

மதிமாறன் விமர்சனம்

வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், பவா செல்லத்துரைமற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் மதிமாறன்

கதைக்களம் ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி என்ற பாடல் வரியை பொய்ப்பித்து ஆள் வளரவில்லை என்றாலும் தன் மதியின் மூலம் ஆளுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்

நெடுமாறன் இவர்தான் கதையின் நாயகன் உயரம் 3 அடி என்றாலும் புத்தி கூர்மை உடையவர் இவர் சகோதரி மதி இருவரின் சகோதர பாசங்கள் உடன் ஒரு கிரைம் கலந்து வெளிவந்திருக்கும் படம் மதிமாறன்
நாயகனுக்கு இது அறிமுகம் படம் என்றாலும் ஒரு உயரம் குறைந்த வரை நாயகனாக ஒரு படம் முழுக்க நாம் பார்க்கும்போது நமக்கு உயரம் தெரியவில்லை அவரின் நடிப்பு நம்மை கட்டி போட்டு வைத்து விடுகிறது

போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத கொலை வழக்கை தன் மதியின் மூலம் மிக அருமையாக கண்டுபிடிக்கும் விதம் இயக்குனரின் கதை சொல்லும் விஷயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு

நாயகி இயக்குனர் பாலாமூலம் அறிமுகமானவர் என்பதால் படத்தின் இயக்குனர் அவரின் உதவியாளர் என்பதால் இந்த படத்தில் அவர் நாயகியாக இருக்கிறார்  பளிச்சென்று முகம் புன்சிரிப்பில் நம் பழைய சினேகாவை ஞாபகப்படுத்துகிறார் நடிப்பிலும் நான் பாலாவின் மாணவி என்பதை நிரூபித்து இருக்கிறார்

எம் எஸ் பாஸ்கர் இவர் ஒரு நடிப்பு புயல் என்பதில் நமக்கு ஐயமில்லை ஆனால் அந்த புயல் எந்த நேரத்தில் வீச வேண்டுமோ அந்த நேரத்தில் வீசினால் நன்றாக இருக்கும்

இயக்குனர் பல காட்சி அமைப்புகளில் நாடகத் தனத்தை காட்டியிருக்கிறார் அதைத் தவிர்த்து இருந்தால் படத்தின் வேகம் இன்னும் கூடி இருக்கும்

உருவத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாது என்ற மையக் கருத்தை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் நல்ல கருத்து

மதிமாறன் –உங்களில் ஒருவன்

Must Read

spot_img